தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித்னா யாரு?னு கேட்ட அமைச்சர் துரைமுருகன்.. பாட்டாய் பாடி கலாய்க்கும் Ak ஃபேன்ஸ்!

அஜித்னா யாரு?னு கேட்ட அமைச்சர் துரைமுருகன்.. பாட்டாய் பாடி கலாய்க்கும் AK ஃபேன்ஸ்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 15, 2023 11:54 AM IST

‘அஜித்னா யாரு?’ என்று நெறியாளரை நோக்கி கேள்வி எழுப்பினார் துரைமுருகன்.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் நடிகர் அஜித்   -கோப்புபடம்
அமைச்சர் துரைமுருகன் மற்றும் நடிகர் அஜித் -கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன், ‘அஜித்னா யாரு?’ என்று நெறியாளரை நோக்கி கேள்வி எழுப்பினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை , யார் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியது, அவரது ரசிகர்களை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

அதுமட்டுமின்றி, துரைமுருகனின் அந்த வீடியோ, வைரலானது. அஜித் ஹேட்டர்ஸ், அந்த வீடியோவை ஒருபுறம் வைரலாக்கிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு அஜித் ரசிகர்கள், ஜெயிலர் பாடலை எடிட் செய்து, பதலடி கொடுத்து வருகின்றனர். சோஷியல் மீடியாவில், தற்போது அது தான் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, திரையுலகம் சார்பில் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது அதில் பங்கேற்ற நடிகர் அஜித், ‘தன்னை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சி வரவழைத்ததாகவும், தன்னை மிரட்டுகிறார்கள்’ என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டி ஒட்டுமொத்த மேடையையும் அதிர வைத்தார். அதை கேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எழுந்து நின்று, அஜித்தின் பேச்சுக்கு கை தட்டி, அவருக்கு ஆதரவு அளித்தார். 

இந்த சம்பவத்தை நினைவூட்டியே, ‘அஜித் என்றால், உங்கள் தலைவர் பாராட்டு விழாவில் சம்பவம் செய்தவர்’ என்று AK ரசிகர்களும், திமுக எதிர்பார்ப்பாளர்களும் வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்