Actress Tamannaah: அந்த விளம்பரத்துல ஏன் நடிச்சீங்க?.. தமன்னாவை நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு! - நடந்தது என்ன?
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஐபிஎல் போட்டிகளின் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பியதால் , வயாகாமுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என சொல்லப்படுகிறது.

வயாகாம் 18 குழுமத்தின் ஒளிபரப்பு விதி உரிமைகளை மீறி, ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை, ஃபேர்பிளே செயலி சட்ட விரோதமாக ஒளிப்பரப்பியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நடிகை தமன்னாவிற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது.
அதன் படி, ஃபேர்பிளே செயலி விளம்பரத்தில் நடித்து, அங்கு ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு ஊக்குவித்தது ஏன் என்பது தொடர்பான விளக்கத்தை, வருகிற ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகி கூறுமாறு, மகாராஷ்டிரா சைபர் குழு போலீசார் உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த வழக்கில், பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் பெயரும் அடிபட்டது. இதனையடுத்து இந்த வார தொடக்கத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், பணி நிமித்தம் காரணமாக தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறி, அவர் ஆஜராக மாற்றுத்தேதியை கேட்டு இருந்தார்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, ஐபிஎல் போட்டிகளின் சட்டவிரோதமாக ஒளிப்பரப்பியதால் , வயாகாமுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என சொல்லப்படுகிறது.
முன்னதாக, பாலிவுட் பாடகரும், ராப் பாடகருமான பாட்ஷா மற்றும் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் மேலாளர்களிடமும், மகாராஷ்டிரா சைபர் போலீசார், ஃபேர்பிளே செயலியை விளம்பரப்படுத்தியது ஏன் என்பது தொடர்பாகவும், கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட பார்வையாளர்களை ஊக்குவித்தது தொடர்பாகவும், விசாரணை நடத்தினர்.
என்ன வழக்கு?
கடந்த 2023ம் ஆண்டு Viacom 18 குழுமத்தால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில், ஃபேர்பிளே செயலியில், 2023 ம் ஆண்டு நிகழ்ந்த ஐபிஎல் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதற்காகவும், அதனை ஊக்குவித்த நடிகர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
Viacom18 குழுமம் பல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் OTT தளமான VOOT ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அக்டோபர் 2021- ல், Pikashow, Foxi, Vedu, Smart Player Lite, Film Plus, Tea TV மற்றும் Wow TV ஆகிய ஆப்கள், Viacom18 -க்கு சொந்தமான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை சட்டவிரோதமாக ஒளிப்பரப்பியதாகவும், இதன் மூலமாக Viacom18 குழுமத்திற்கு 100 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதும், அதன் ஆண்டி பைரசி குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக, காவாலா பாடல் மூலம் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை நிலைநிறுத்தி இருக்கும் தமன்னாவிற்கு, அடுத்ததாக அரண்மனை 4 படம் ரிலீஸூக்கு தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் அண்மையில் கிளாமரான பாடல்கள் குறித்தும் அதை தேர்ந்தெடுத்து ஆடுவது குறித்தும் நடிகை தமன்னா பேசி இருந்தார்.
இது குறித்து அண்மையில் அவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு முறை, ஒரு பேட்டியில் நடிகர்கள் என்பவர்கள் நல்ல ஆடைகளை உடுத்தி வேலை செய்யும் வேலை ஆட்கள்” என்று கூறியிருந்தேன். அதைப்பற்றி நீங்கள் தற்போது கேட்கிறீர்கள்.
இந்த துறையில் இருந்து கிடைக்கும் பணம், புகழ்,கிளாமர் என எல்லாமும் பிடிக்கும். இதையெல்லாம் பிடிக்காது என்று சொன்னால் அது நியாயமாக இருக்காது. நான் இருக்கும் இடமானது எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருக்கிறது.
இந்த துறையின் மேற்பரப்பானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது வேறு மாறியாக இருக்கும். நீங்கள் இந்த துறையில் பார்வையாளர்களுக்கு மிகவும் சவாலான ஒரு விஷயத்தை, கடினமாக உழைத்து கொடுப்பீர்கள்.
ஆனால் அதை பார்க்கும் பொழுது எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் செய்தது போல இருக்கும். இது உண்மையில் ஒரு பணியாளரின் மனநிலையில் இருந்து செய்யக்கூடிய வேலைதான். இதை நிகழ்த்துவதற்கு மனதளவில், எமோஷனல் அளவில், உடல் அளவில் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் நான் அப்படி சொன்னேன்.
கிளாமரான பாடலைப் பற்றிய பார்வையானது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவை கிளாமரை கொண்டாடும் செயல்முறை தான். பெண்களும் இந்த மாதிரியான ஒரு பார்வையை எடுத்து வர வேண்டும். அந்த பாடலில் இருக்கக்கூடிய சில விஷயங்கள் மிகவும் கீழ்த்தரமானவையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவே!
பெண்ணானவள் மிக மிக அழகானவள். ஆகையால், அந்த மாதிரியான கிளாமர் பாடல்கள் கொண்டாடப்பட வேண்டும். இதன்மூலம் மக்களுடன் எனக்கு பெரிய கனெக்சன் உண்டாகிறது ஒரு சிறிய குழந்தை கூட அந்த பாடலைக் கேட்டு ஆடுகிறது. இதுதான் ஒரு நடிகராக,ஒரு நடன கலைஞராக என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்.
தன் எதிரே இருக்கக்கூடிய மனிதரின் மகிழ்ச்சியை வெளியே கொண்டு வர வேண்டும். இது போன்ற பாடல்களை நான் தொடர்ந்து செய்ய போகிறேன்.” என்று பேசினார்
முன்னதாக பாலிவுட் நடிகர் விக்ரம் வர்மா உடனான காதல் குறித்து பேசிய தமன்னா, “லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது.
ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன். அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்