தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: ‘வெள்ளையும் இல்ல.. காவியும் இல்ல.. பொன் நிறத்தில் வள்ளுவர்..’ வேற மாதிரி வரும் விஜய்!

VIJAY: ‘வெள்ளையும் இல்ல.. காவியும் இல்ல.. பொன் நிறத்தில் வள்ளுவர்..’ வேற மாதிரி வரும் விஜய்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jun 17, 2023 10:55 AM IST

Vijay MakkalIyakkam: இன்றைய இளம் தலைமுறை நாளைய வாக்காளர் என்பது விஜய்க்கு தெரியாமலா இருக்கும்? அந்த இளம் தலைமுறைக்கு ஒரு குடும்பம் இருக்கும், அந்த குடும்பத்திற்கு ஓட்டு இருக்கும் என்பதும் தெரியாமல் இல்லை.

நடிகர் விஜய் ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லோகோவில் வள்ளுவர்.
நடிகர் விஜய் ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லோகோவில் வள்ளுவர்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிகழ்ச்சியையொட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்டனர். இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் எண்ட்ரி

நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு இந்த நிகழ்ச்சி அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை குறி வைத்து அரசியலில் அடியெடுத்து வைக்க விஜய் முடிவு செய்திருக்கிறார் என்பதற்கு உதாரணம் தான் இந்த முயற்சி என்கிறார்கள். வழக்கமான சினிமாத்தனத்தில் விஜய் நிறையவே இந்த நிகழ்ச்சிக்காக மாறியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. நிகழ்ச்சியில் ரசிகர்கள் கட்அவுட் வைக்கக் கூடாது என்று அவர் அறிவித்த நொடியில் இருந்து அரசியலின் முதற்படிக்கட்டில் அடியெடுத்து வைத்துவிட்டார் விஜய்.

எந்த மாதிரி அரசியல்?

தமிழ்நாட்டில் அரசியல் இரு பிரிவாக எப்போதும் பிரிந்து கிடக்கும். ஒன்று இடது மற்றொன்று வலது. மய்யம் என்று வந்த கமல் கூட, இடது பக்கம் கொஞ்சம் சாயத் தொடங்கிவிட்டார். அப்படியிருக்கும் போது இன்னும் மய்யம் காலியாகத்தான் இருக்கிறது. அதற்கு தான் விஜய் குறி வைக்கிறார் என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் வள்ளுவரை வைத்து நடக்கும் அரசியலை நாம் அறிவோம். வள்ளுவர் ஆடை காவியா? வெள்ளையா? என்கிற விவாதம் எல்லாம் நடந்து கொண்டிருந்தது, நடக்கிறது. 

இந்த நேரத்தில் தான் விஜய் தன்னுடைய விருது நிகழ்ச்சிக்கான லோகோவில் வள்ளுவரை பொன் நிறத்தில் வடிவமைத்து புது வித சேதியை மக்களுக்கு சொல்ல வருகிறார். வள்ளுவர் பொன்னானவர்; அவருக்கு காவியும் இல்லை, வெள்ளையும் இல்லை என்று நடுவன் அரசியலின் நாயகனாக எண்ட்ரி ஆகிறார் விஜய். 

புதிய ரூட் போடும் விஜய்!

இது பார்க்க சாதாரணமாக தெரியலாம். ஆனால் பின்னணியில் இருக்கும் அரசியல் அலப்பெரியது. அரசியலில் கொள்கை என்ன என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும். தன்னுடைய கொள்கை வலதும் இல்லை , இடதும் இல்லை என்பதை ஒரு லோகோ மூலம் தெளிவாக்கியிருக்கிறார் விஜய். இதன் மூலம் வேற மாதிரி அரசியலுடன் விஜய் அடியெடுத்து வைக்கப் போகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இன்றைய இளம் தலைமுறை நாளைய வாக்காளர் என்பது விஜய்க்கு தெரியாமலா இருக்கும்? அந்த இளம் தலைமுறைக்கு ஒரு குடும்பம் இருக்கும், அந்த குடும்பத்திற்கு ஓட்டு இருக்கும் என்பதும் தெரியாமல் இல்லை. புத்தி கூர்மையான நகர்த்தலுடன் தமிழக அரசியலுக்கு எண்ட்ரி ஆகிறார் புதிய தலைவன்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்