இது அது அல்ல.. மீண்டும் ஃபார்முக்கு வந்த கமல்.. என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? வைரலாகும் பேச்சு
நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்ததற்கான காரணத்தை கூறி நடிகர் கமல் ஹாசன் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜிந் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் கம்பெனி தாயாரித்திருந்தது. அமரன் வரும் தீபாவளிக்கு அமரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சாய்பல்லவி ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, மெரீனா படம் மூலம் அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்கள் வரிசையில் சிவகார்த்திகேயன் உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்தள்ளர். இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் ஹே மின்னலே பாடல் வெளியாகி இருந்தது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தற்போது இப்படத்தை இயக்கும் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம் சார்பில் படக்குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அமரன் படத்தில் பேசிய கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரிப்பதற்கான காரணத்தை கூறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கமலின் காரணம்
அதாவது, தனது தாயாரப்பில் இதற்கு முன்வந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாம் புனை கதைகள். இது அது அல்ல. இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது. இந்த வீரருக்கு இணையான வீரம் வீட்டிலும் ( மேஜர் முகுந்தனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ்) இருக்க வேண்டும். இது அவரைப் பற்றிய கதையும் கூட.
இது நிஜம், இது நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று சொல்ல முடியாது. இது அப்படியே நிகழ்ந்து விட்டது. நாங்கள் இதை கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுக்கு பங்கு என்னவென்றால் கடமையைச் செய்துள்ளோம் எனக் கூறினார்.
இதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல், கமல் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் போல என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
சரியாக கையாளனும்
முன்னதாக தொகுப்பாளர், இது ஒரு மிலிட்டரி படம் துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கு? என கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் சிரித்துவிட்டு, துப்பாக்கி எப்போதும் ரொம்ப ரொம்ப கனமானது. அதை சரியாக கையாள வேண்டும். அதை முடிந்த அளவுக்கு சரியாக கையாண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.
அதற்கான தைரியத்தை கொடுக்க எங்களுக்கு கமல்ஹாசன் இருக்கிறார். இந்த கதையை நான் தேர்ந்தெடுத்தாக நான் நினைக்கவில்லை. இந்த கதை தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளது. இதனை முக்கியமான பொறுப்பாக கருதி, கடினமான உழைப்பை கொடுத்துள்ளோம் என்றார்.
அமரன் படம் தீபாவளி சமயத்தில் பல படங்களோடு போட்டியாக வெளி வருவதால் எந்த படம் பந்தயம் அடிக்கப் போகிறது என்ற ஆவலும் அதிகரித்து உள்ளது. அத்துடன், சமீபத்தில் விஜய் நடித்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கிய ‘தி கோட்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார்.
அவர் வரும் காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனை பார்த்து ‘துப்பாக்கியை புடிங்க’என்று விஜய் வசனம் பேசியிருப்பார். இதன் மூலம் விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் என்ற சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது சிவ கார்த்திகேயன் மறுத்துள்ளார். இருந்தாலும் இனி வரும் படங்கள் வாயிலாக விஜயின் இடத்தை சிவா நிறப்புவாரா எனவும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அமரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.