G.V.Prakash Kumar: இது ஆட்டிடியூட்.. ஆன்மாவை ஒளிரச் செய்யும் சிங்கிள்.. 7வது சதத்தில் சம்பவம் செய்வாரா ஜி.வி.பிரகாஷ்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  G.v.prakash Kumar: இது ஆட்டிடியூட்.. ஆன்மாவை ஒளிரச் செய்யும் சிங்கிள்.. 7வது சதத்தில் சம்பவம் செய்வாரா ஜி.வி.பிரகாஷ்?

G.V.Prakash Kumar: இது ஆட்டிடியூட்.. ஆன்மாவை ஒளிரச் செய்யும் சிங்கிள்.. 7வது சதத்தில் சம்பவம் செய்வாரா ஜி.வி.பிரகாஷ்?

Malavica Natarajan HT Tamil
Oct 03, 2024 07:04 PM IST

G.V.Prakash Kumar: அமரன் படத்தின் முதல் சிங்கிளான ஹே மின்னலே பாடல் நாளை வெளியாகிறது. இது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 700வது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

G.V.Prakash Kumar: இது ஆட்டிடியூட்.. ஆன்மாவை ஒளிரச் செய்யும் சிங்கிள்.. 7வது சதத்தில் சம்பவம் செய்வாரா ஜி.வி.பிரகாஷ்?
G.V.Prakash Kumar: இது ஆட்டிடியூட்.. ஆன்மாவை ஒளிரச் செய்யும் சிங்கிள்.. 7வது சதத்தில் சம்பவம் செய்வாரா ஜி.வி.பிரகாஷ்?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள திரைப்படம் அமரன். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அமரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்பேட் ஒன்றை ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அமரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் நிச்சயம் காதல் பாடலாகத்தான் இருக்கும். இந்தப் பாடலுக்கு ஹே மின்னலே என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை பலரது வாழ்க்கையில் மேஜிக் செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பாடல் வெளியீட்டிற்காக பலரும் காத்துள்ளனர்.

ராணுவ வீரரின் பயோபிக்

தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில், முகுந்தன் என்ற கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எப்போது ரிலீஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.

அமரன்

இந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் போது, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதிய முதல் வார்த்தை அமரன் என்பதால் இந்தப் பெயரையே படத்திற்கு வைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அமரன் என முன்னதாகவே தமிழ்படம் ஒன்று வெளியாகி இருந்த போதிலும் இவர் இந்த தலைப்பிற்காக உறுகியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமரன் படக்குழு, கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது, படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடல்களுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

ஹே மின்னலே ப்ரமோ வீடியோ

தற்போது, ஹே மின்னலே பாடல் குறித்த அடுத்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ். ஹே மின்னலே பாடல் தனது இசையில் வெளியாகும் 700வது பாடல் எனக் குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் இந்தப் பாடலுக்கு நிச்சயம் மெனக்கெட்டிருப்பார் எனத் தெரிகிறது. தனது 700வது பாடலை மக்களின் விருப்ப பாடலாக மாற்ற அவரது மேஜிக் நிச்சயம் மக்களிடம் ஒர்க் அவுட் ஆகும் எனலாம்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா ஹே மின்னலே பாடலை எழுதியுள்ளார். பாடகர்கள் ஹரிச்சரண் மற்றும் ஸ்வேதா மேனன் இப்பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடலின் ப்ரமோ வீடியோவை வெளியிட்டுள்ள ஜி.வி. பிரகாஷ் ஹே மின்னலே பாடல் உங்கள் ஆன்மாவை ஒளிரச் செய்ய நாளை முதல் வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷின் இந்த வரிகளை உண்மையாக்க ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

Whats_app_banner