Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’; மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி-amaran director rajkumar periasamy reveals this reason as to why he chose sivakarthikeyan as lead in biopic movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’; மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி

Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’; மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி

Kalyani Pandiyan S HT Tamil
Sep 28, 2024 04:49 PM IST

Sivakarthikeyan: முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. - சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தது ஏன்?

Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’

;மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி!
Sivakarthikeyan: ‘அந்த முகம் இருக்கே’ ;மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கிற்கு சிவகார்த்திகேயன் ஏன்?- ராஜ்குமார் பெரியசாமி!
அமரன் படப்பிடிப்பில்
அமரன் படப்பிடிப்பில்

முன்னதாக, இந்தப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில், நேற்றைய சாய் பல்லவியின் கதாபாத்திரம் தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் மலேசியாவில் நடந்த ‘அமரன்’ புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசி இருக்கிறார்.

ஏன் சிவகார்த்திகேயன்?

அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.

 

அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயேன் நடித்திருக்கிறார். அவரது மனைவியான இந்து கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:

இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.