தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Hari Vairavan Death: நடிகர் ‘வெண்ணிலா கபடி குழு’ ஹரி வைரவன் காலமானார்!

Actor Hari Vairavan Death: நடிகர் ‘வெண்ணிலா கபடி குழு’ ஹரி வைரவன் காலமானார்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 03, 2022 07:58 AM IST

முகம் வீங்கி, உறுப்புகள் செயல் இழந்து ஒவ்வொரு நாளையும் கொடுமையாக கடந்து வந்த ஹரி, இன்றைய நாள் தொடங்கிய இரவு 12:45 மணியளிவில் காலமானார்.

வெண்ணிலா கபடி குழுவில் நடித்த ஹரி வைரவன்
வெண்ணிலா கபடி குழுவில் நடித்த ஹரி வைரவன்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில், சக கபடி வீரராக நடித்தவர் ஹரி வைரவன்.

ஆஜானுபாகு போன்ற அவரது உருவ தோற்றமும், நடிப்பும் அவருக்கு அந்த படத்தில் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஹரி வைரவன்.

அதன் பின் அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. எங்கிருந்தார் என்பதும் தெரியாமல் இருந்ததது. இந்நிலையில் தான், திடீரென அவரது மனைவி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய, ஹரி வைரவனின் சூழல் தெரியவந்தது.

11 ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்த ஹரி வைரவனுக்கு திடீரென கால்கள் வீங்கத் தொடங்கின. அப்போது ஸ்கேன் எடுத்து பார்க்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு 8 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் எனக்கூறியதால், அவரிடம் அதற்கான பணம் இல்லாமல், அதை தவிர்த்துள்ளார்.

அதன் பின் அரசு மருத்துவவமனைக்குச் சென்று சிகிச்சை எடுததுள்ளார். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சையிலிருந்து பின்னர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், வீடு திரும்பிய அவருக்கு தொடர்ந்து மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அவரது விருப்பத்தின் பேரில் விடுதியில் மனைவியுடன் அறை எடுத்து தங்கியுள்ளார் ஹரி. அங்கு அவரது கால்கள் செயல் இழந்து போக, இதயத் துடிப்பும் குறைந்து போயுள்ளது. உடனே அவர் இறந்துவிட்டதாக நினைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அவர் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டார். ஆனாலும், 12 நாட்கள் கோமாவில் இருந்து தான் ஹரி மீண்டார். இதற்கிடையில் அவரது இரு சிறுநீரகங்களும செயல் இழந்து போயின. அடுத்த 6 மாதம் தான் உயிரோடு இருப்பார் என டாக்டர்களும் கைவிரித்த நிலையில், தன் குடும்பத்துடன் கடைசி காலத்தை கடத்தி வந்தார் ஹரி வைரவன்.

முகம் வீங்கி, உறுப்புகள் செயல் இழந்து ஒவ்வொரு நாளையும் கொடுமையாக கடந்து வந்த ஹரி, இன்றைய நாள் தொடங்கிய இரவு 12:45 மணியளிவில் காலமானார். அவரது குடும்பத்தார் மட்டுமின்றி, சினிமா உலகைச் சேர்ந்த பலரும் அவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்