தமிழ் செய்திகள்  /  Elections  /  Delay By Ntk Party Hinders Sugarcane Farmer Symbol Allotment: Election Commission

NTK Symbol: ’தாமதமே சின்னம் தராததற்கு காரணம்!’ நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பதிலடி!

Kathiravan V HT Tamil
Mar 01, 2024 07:32 PM IST

”கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே தராமல் இருந்திருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என நாம்தமிழர்கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு”

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதகாவும், கடந்த காலங்களில் 6.7 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம், அதே சின்னத்தை தர வேண்டும். கரும்பு ஒதுக்கமல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த காலங்களில் கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிட்டோம் அதனால் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கு உத்தரவிடுங்கள் என நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது. 

இப்படி மனு தாக்கல் செய்து ஒவ்வொருவரும் சின்னத்தை பெற்றார்கள் என்றால் நூற்றுக்கணக்கான கட்சிகள் சின்னம் கோரி நீதிமன்றத்தை நாடுவார்கள் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என இந்திய தேர்தல் ஆணையம் வாதிட்டது. 

கரும்பு விவசாயி சின்னத்தை வேண்டுமென்றே தராமல் இருந்திருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என நாம்தமிழர்கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், வேண்டுமென்றால் தேர்தலில் போட்டியிட்டு போதுமான வாக்கு சதவீதத்தை அடைந்து தேவையான எம்பி எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இக்கட்சி பெறட்டும். நாங்கள் அவர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை கொடுக்கிறோம் என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது. 

கரும்பு விவசாயி சின்னத்தை தற்பொழுது பெற்றிருக்கக் கூடிய கட்சி கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி கேட்டிருந்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9ஆம் தேதி தான் கேட்டார்கள்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பிப்ரவரி 13ஆம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. தாமதம் செய்தது நாம் தமிழர் கட்சியின் தவறு. இதில் எப்படி இவர்கள் எங்களை குறை கூறுகிறார்கள் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் காட்டமாக பதில் அளிக்கப்பட்டது. 

கரும்பு விவசாயி சின்னம் free symbol என்பதால் அதை முன்வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் இது நடைமுறை இதை எப்படி மாற்ற முடியும் என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதுடன், நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை கேட்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 

WhatsApp channel