தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: பாண்டியர்களின் கட்டிடக்கலை.. 800 ஆண்டுகள் பழமையானது.. பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் திருக்கோயில்

HT Yatra: பாண்டியர்களின் கட்டிடக்கலை.. 800 ஆண்டுகள் பழமையானது.. பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் திருக்கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
May 10, 2024 06:15 AM IST

காலத்தால் அழியாத எத்தனையோ சிறப்பு வாய்ந்த கோவில்களில் இங்கு இருந்து வருகின்றன அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது சின்ன வெண்மணி ஊரில் அமைந்துள்ள பீமேஸ்வரர் திருக்கோயில்.

பாண்டியர்களின்  800 ஆண்டுகள் பழமையான பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் திருக்கோயில்
பாண்டியர்களின் 800 ஆண்டுகள் பழமையான பீமன் வழிபட்ட பீமேஸ்வரர் திருக்கோயில்

காலத்தால் அழியாத எத்தனையோ சிறப்பு வாய்ந்த கோவில்களில் இங்கு இருந்து வருகின்றன அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது சின்ன வெண்மணி ஊரில் அமைந்துள்ள பீமேஸ்வரர் திருக்கோயில்.

தல பெருமை

 

இங்கு வீற்றிருக்கக்கூடிய மூலவர் கிழக்கு பார்த்தபடி காட்சி கொடுத்து வருகிறார் 6 மாதத்திற்கு ஒரு முறை பௌர்ணமிக்கு முன் மற்றும் பின் இரண்டு நாட்கள் சிவபெருமானின் மீது சூரிய ஒளி படுவது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக இந்த பீமேஸ்வரர் கோயில் வழங்கி வருகிறது இந்த திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திருக்கோயிலில் 27 நட்சத்திர மரங்கள் காணப்படுகின்றன. அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களுக்கு உரித்தான மரத்தை வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

இந்த திருக்கோயில் ராகு கேது தோஷ மோட்ச தலமாக விளங்கி வருகிறது. நுழைவு வாயில் மண்டபம் மற்றும் தாயார் ஆனந்தவல்லி அம்மன் கருவறையில் நிலவு மற்றும் பாம்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ராகு கேது இருவரும் அம்மனின் நேரடி பார்வையில் இருப்பதால் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி உண்டாகும் என நம்பப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் அமைந்துள்ள குபேர லிங்கத்தில் மாமுனிவர் முக்கிய அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு வழிபட்டால் மன உறுதி மற்றும் உடல் ஆரோக்கியம் அதிகமாகும் என கூறப்படுகிறது.

தல வரலாறு

 

மகாபாரதத்தில் கூறியுள்ள பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டு காலம் வனவாசம் இருந்தார்கள். அந்த பஞ்சபாண்டவர்களில் ஒருவராக விளங்கிவரும் பீமன் வழிபட்ட தலமாக இந்த பீமேஸ்வரர் திருத்தலம் விளங்கி வருகிறது. இந்த திருக்கோயில் பாண்டியர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கோவிலை சுற்றி நான்கு புறங்களிலும் சிவபெருமானின் தலங்கள் அமைந்துள்ளன.

இந்த சின்னவெண்மணி கோயிலில் இருக்கக்கூடிய பீமேஸ்வரர் மற்றும் நான்கு கோயிலில் இருப்பதைவிட சிறப்பாக கருதப்படுகிறார். இங்கு லிங்கமாக வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவலிங்கத்தின் தலைமீது ஐந்து தலை நாகம் காணப்படுகிறது.

அமிர்தம் கடைந்த பிறகு அமுதத்தை பெறுவதற்காக ராகு பகவான் இடம் மாறி தேவர்களோடு அமர்ந்தார். இதனைக் கண்ட மகாவிஷ்ணு அவருடைய தலையை வெட்டினார். அப்படி ஒரு தலை நாகமாக இருந்தவர் ஐந்து தலை நாகமாக உருவெடுத்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமானின் இரண்டு கண்களாக விளங்கி வரக்கூடிய சூரியன் மற்றும் சந்திரன் இருவரையும் விழுங்கி விடுவதாக ராகு சபதம் எடுத்தார்.

இதனால் உலகம் இருளாக மாறிவிடும் என்று எண்ணிய மகாவிஷ்ணு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விழுங்க வேண்டும் என ராகுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்படி ராகு பகவான் ஒப்புக்கொண்டார். அதுதான் தற்போது சந்திரகிரகணம் மற்றும் சூரிய கிரகணமாக விளங்கி வருகிறது. இந்த புராணக் கதைகள் அனைத்தும் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel