தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Navaratri: தொடங்கியது வசந்த நவராத்திரி விரதம்!

Navaratri: தொடங்கியது வசந்த நவராத்திரி விரதம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2023 10:51 AM IST

ஆன்மீகத்தின் படி நான்கு நவராத்திரிகளில் வசந்த நவராத்திரி விரதம் இன்று முதல் தொடங்குகிறது.

நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்

இது மிகவும் சிறப்புப் பெற்ற காலமாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் எனக் கூறுகிறார். இந்த வசந்த ருதுவான இளவேனிற் காலம் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் தொடங்குகிறது.

அப்படிப்பட்ட சிறப்பான நாள் இன்றிலிருந்து தொடங்குகிறது. இன்றிலிருந்து 9 இரவுகள் அம்பிகையை வழிபாடு செய்யச் சிறந்த காலமாகும். இதுவே வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வித்யா சாஸ்திரம் நான்கு நவராத்திரிகள் கொண்டாட வேண்டும் எனக் கூறுகிறது. தேவி நவராத்திரி, வராகி நவராத்திரி, சரந் நவராத்திரி, சியாமளா நவராத்திரி என நான்கு நவராத்திரி உள்ளன.

அனைவரும் பொதுவாகக் கொண்டாடும் நவராத்திரி சரந் நவராத்திரி ஆகும். இது ஐப்பசி மாதத்தில் வரும். ஆனால் ஸ்ரீ வித்யா மார்க்கத்தில் ஈடுபட்டு நாவாவரணும் போன்ற பூஜைகளைச் செய்பவர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த நான்கு நவராத்திரி களையும் கொண்டாடுபவர்கள் அம்மனை போற்றி விசேஷ பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சுக்லபட்ச பிரதமை தினமான இன்று முதல் 8 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த நவராத்திரி தினத்தில் தினசரி அம்மனை போதித்து விசேஷ பூஜைகள் செய்து கன்னிகா பூஜைகள் நடத்திக் கொண்டாடலாம்.

பொதுவாக இது போன்ற நவராத்திரி பூஜைகளில் பெண்களே விசேஷமாகக் கொண்டாடுவார்கள். ஏனென்றால் இது கடுமையான விரதம் கடுமையான பூஜை மேற்கொண்டு செய்யக்கூடிய தெய்வ காரியமாகும். அதனால் பெண்கள் இதில் ஈடுபட்டு தங்களது குடும்ப நன்மைக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த வசந்த நவராத்திரி பூஜை ஹோமம் செய்து அல்லது லலிதா சகஸ்ரநாமம் போன்ற பூஜைகள் செய்து அம்மனை வழிபடலாம். முடியாதவர்கள் தினமும் விரதம் இருந்து அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து பின்பற்றலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்