Tamil New Year Rasipalan: ‘துன்பங்களில் இருந்து விடுதலை! திடீர் அதிர்ஷ்டம்!’ கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்!
”கும்ப ராசிக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், இதயநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நோய்களில் இருந்து விடுபடலாம்”

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்தில், மிதுன ராசியில் பிறக்கபோகும் குரோதி தமிழ் புத்தாண்டு மனிதனுக்கு சகல சௌபாக்கியங்களை தர வல்லது. இந்த ஆண்டின் ராஜா செவ்வாய் பகவான், மந்திரி சனிஸ்வர பகவான், இந்த ஆண்டு முழுவதும் முருக பெருமானின் பேரருள் நிலைத்து இருக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 25, 2025 09:37 AMகோடி கோடியாய் கொட்ட போகிறாரா குரு?.. 2025-ல் ஜாக்பாட் ராசிகள்.. குருபெயர்ச்சி குறி வைப்பது யாருக்கு?
Mar 25, 2025 09:00 AMMoney Luck : சைத்ரா நவராத்திரியில் துர்கா தேவி இந்த 4 ராசிகளுக்கு அருள் புரியப் போகிறாரா.. உங்களுக்கு ஜாக்பாட் சாத்தியமா
Mar 25, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : அதிர்ஷ்டம் உங்கள் பக்கமா.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று நம்ம நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 24, 2025 12:55 PMThe new Baba Vanga : புதிய பாபா வாங்கா : ‘பயமுறுத்தும் கணிப்புகள்.. யார் இந்த ஹாமில்டன் பார்க்கர்?
Mar 24, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : உழைப்பு வீண் போகாது.. வேலையில் கவனம்.. இன்று யாருக்கு கை மேல் பலன் கிடைக்கும் பாருங்க!
Mar 23, 2025 05:42 PMMagaram: ‘மகர ராசி நேயர்களே! கோடிகளை குவிக்க என்ன செய்யலாம்!’ மகரம் ராசிக்குள் மறைந்து இருக்கும் வாழ்கை ரகசியம்!
கிரகங்களின் நிலவரம்!
ஆண்டின் தொடக்கத்திலேயே கும்ப ராசியில் ஜென்மசனி கோச்சாரத்தில் உள்ளார். சித்தரை மாதத்தில் குரு பகவான் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
அதன் பிறகு பங்குனி மாதத்தில் சனீஸ்வரர் மீன ராசிக்கு செல்கிறார். ராகு மீனத்திலும், கன்னியில் கேதுவும் உள்ளனர். சித்திரையில் சூரியன் மேஷம் ராசிக்கு வரும் போது கும்ப ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
வாழ்க்கையில் தெளிவு பிறக்கும்!
கும்ப ராசிக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம், இதயநோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நோய்களில் இருந்து விடுபடலாம்.
உறவுகளில் மந்த நிலை ஏற்படலாம்!
ஜென்மத்தில் உள்ள சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியை பார்க்கிறார். இதனால் முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். 7ஆம் பார்வையாக திருமணத்தடையை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய உறவுகளில் மந்த நிலை உண்டாகும், 10ஆம் பார்வையாக விருச்சிகம் ராசியை பார்க்கிறார்.
துன்பங்களில் இருந்து விடுதலை
குரு பகவானை பொறுத்தவரை 4ஆம் இடமான ரிஷபராசிக்கு செல்வதால், அந்த வீட்டில் ஏதெனும் சுப கிரகங்கள் இருந்தால் நன்மைகள் உண்டாகும். குருவின் பார்வை 8ஆம் வீட்டில் விழுவதால் கடன்கள், முயற்சிகளில் இருந்த தடங்கல்கள், உடல்நல குறைபாடு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்!
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும், இடமாற்றம் ஏற்படும், நிலுவையில் இருந்த கடன்கள் வசூல் ஆகும்.
சனியும். குருவும் சேர்ந்து விருச்சிகத்தை பார்ப்பதால் தொழில் தடங்கலில் சிக்கியவர்களுக்கு சற்று மன ஆறுதல் கிடைக்கும். தடைபட்ட தொழில் துளிர்க்கும், பதவி உயர்வு கிடைக்கும், வீடு, அலுவலகம், சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும், ஒரு சிலருக்கு வீடு, வண்டி, வாகனம், பூமி, கிடைக்கும்.
மாணவர்களுக்கு உயர்க்கல்வி வாய்ப்பு உறுதி!
மாணவர்கள் உயர்க்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். படித்து முடித்த மாணவர்களுக்கு கௌரவமான உயர்ந்த பதவிகள் கிடைக்கும். வறுமையின் பிடியில் சிக்கிய கும்பம் ராசிக்காரர்களின் வாழ்கையில் மேன்மை ஏற்படும்.
வெளிநாட்டு யோகம் உண்டாகும்!
வெளிநாடு செல்ல வேண்டும் என எண்ணியவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகமும், வெளிநாட்டிலேயே குடியேறும் வாய்ப்புகளையும் குரு பகவான் ஏற்படுத்தி தருவார்.
புதிய தொழில் செய்வதில் கவனம் அவசியம்!
ராசிக்கு 2ஆம் இடத்தில் உள்ள ராகு ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலை மேற்கொள்ள தூண்டுவார். புதிய தொழிலை மேற்கொள்ளும் போது நன்கு யோசித்து செய்தால் வெற்றி உண்டாகும்.
வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள்!
இந்த ஆண்டு முழுவதும் சகல சௌபாக்கியங்களை பெற மயிலாடுதுறையில் உள்ள சிவபெருமானையும், திருப்பதியில் ஒருநாள் இரவு தங்கி இருந்து அங்கே உள்ள வராக மூர்த்தியை வழிபட வேண்டும். வன்னி மர வழிபாட்டை செய்து வர நலன்கள் பெருங்கும்.
