தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year: 'திடீர் அதிர்ஷ்டம் வரும், வியாபாரம் பெருகும்.. ஆனால்'-சிம்ம ராசிக்காரர்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்

Tamil New Year: 'திடீர் அதிர்ஷ்டம் வரும், வியாபாரம் பெருகும்.. ஆனால்'-சிம்ம ராசிக்காரர்களுக்கான தமிழ் புத்தாண்டு பலன்

Manigandan K T HT Tamil
Apr 08, 2024 12:26 PM IST

Tamil New Year Simma Rasi palan 2024: நீண்டகாலமாக எதாவது சாதிக்க வேண்டும் என சிம்மராசிக்காரர்கள் நினைத்து கொண்டிருப்பீர்கள். அதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையும். குரோதி வருடம் உங்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதேபோல், வார்த்தைகள் விஷயத்தை கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் புத்தாண்டு-சிம்ம ராசிப்பலன்
தமிழ் புத்தாண்டு-சிம்ம ராசிப்பலன்

சிம்ம ராசிக்காரர்கள் கண்டிப்பாக தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். குருவுக்கு உங்களுக்கும் ஆகாமல் போகும். அதனால், மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிறு, கழுத்து, முதுகுப் பகுதிகளில் சிறிய உபாதைகள் வர வாய்ப்புள்ளது. இதனால், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குடும்பத்தில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

துணை அல்லது துணைவியின் தேக ஆரோக்கியத்தையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பகை விலகும். யாரிடமும் பேசாமல் இருந்து வந்தீர்கள் என்றால் அது சரியாகும்.

நீண்டகாலமாக எதாவது சாதிக்க வேண்டும் என சிம்மராசிக்காரர்கள் நினைத்து கொண்டிருப்பீர்கள். அதற்கான வாய்ப்பு உங்களுக்கு அமையும். குரோதி வருடம் உங்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதேபோல், வார்த்தைகள் விஷயத்தை கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

2ம் இடத்தில் இருக்கும் கேது 8ம் இடத்தில் உள்ள ராகுவை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலும் திடீர் அதிர்ஷ்டம் அதிகமாக ஏற்படக் கூடிய ராசிக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள் தான்.

பயமம் அதிகமாக செய்யக் கூடியவர்கள். பணம் எப்படி வேண்டுமானாலும் வரும். ஆனால், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டிரேடிங், ரியல் எஸ்டேட், முதலீடுகள் செய்யக் கூடியவர்கள் அதிக வருவாயை பெற வாய்ப்புள்ளது.

வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஆகியவற்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கக்கூடிய சிம்மராசிக்காரர்களுக்கு அனுகூலமான வாய்ப்பு ஏற்படும்.

உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். உங்கள் பெற்றோருக்கு இருக்கும் தேக ஆரோக்கியம் சரியாகும். வழக்குப் பிரச்சனைகளும் சரியாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஜொலிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.

பொதுப்பலன்

தமிழில் மொத்தம் 60 வருடங்கள் உள்ளன. நமக்கு இப்போது வரப்போவது குரோதி வருடம். இது 38வது வருடம்.

இளம் வயதில் இருப்பவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சினிமா துறையினர், ஸ்போர்ட்ஸில் இருப்பவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தீராத நோய்களுக்கு மருந்து கிடைக்கும்.

மருத்துவ துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். கொரோனா போன்ற நோய்கள் வராது. ஆனால், அச்சுறுத்தாத வகையில் ஏதாவது புதிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பு: குரோதி வருடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் தளத்தில் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel