தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aquarius : மிக மிக கவனமா இருக்கணும்.. இந்த 2 கோயிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.. கும்ப ராசி புத்தாண்டு பலன்!

Aquarius : மிக மிக கவனமா இருக்கணும்.. இந்த 2 கோயிலுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.. கும்ப ராசி புத்தாண்டு பலன்!

Divya Sekar HT Tamil
Apr 08, 2024 01:37 PM IST

Kurothi Tamil New Year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு 2024 கும்ப ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் கும்ப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரோதி தமிழ் புத்தாண்டு 2024 கும்ப ராசி
குரோதி தமிழ் புத்தாண்டு 2024 கும்ப ராசி

குரோதி தமிழ் புத்தாண்டு 2024 கும்ப ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் கும்ப ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியில் இருக்கிறார்கள். அதனால் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் சனி வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உடற்பயிற்சி, சமாதானம் செய்ய வேண்டும், சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும், தற்பெருமை பேசக்கூடாது அதேபோல கூடா நட்பு கூடாது.

வாக்கு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் இருக்கிறது, அஷ்டமத்தில் கேது இருப்பதால் நரம்பு தொடர்பான பிரச்சனையும், தலையில் இருந்து பாதம் வரை நரம்புக் கோளாறுகளும், ரத்த ஓட்டத்தை கெடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. இவை எல்லாம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் நலத்தை பாதுகாப்பது நல்லது.

கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீர்வதும், சமாதான உடன்படிக்கையும் ஏற்படும். கூட சகவாசம் மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் அது உங்களை பெரிய பிரச்சனைகளில் இழுத்துச் செல்லும். கும்ப ராசிக்காரர்கள் துணையின் உடல் நிலையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கணவனாக இருந்தால் மனைவியின் உடல் நிலையும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல் நிலையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜென்ம சனியில் கூட உத்தியோகத்தில் அற்புதமான பலன்கள் உங்களுக்கு உண்டு. தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக காணப்பட்டு வந்த கஷ்டங்கள் அகழும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பாதிப்புகள் படிப்படியாக நிவர்த்தி அடையும்.

அதேபோல இரவு நேர பயணம், தொலைதூரப் பயணம் தவிர்ப்பது நல்லது. தேவை இருந்தால் மட்டுமே அங்கு செல்லுங்கள் இல்லை என்றால் அதனை தவிர்த்து விட்டு வேறொரு நாளில் செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ள சிக்கல் தீரும் உத்தியோகத்தில் ஏற்றம் தரும். 40 வயது உடைய கும்ப ராசிகளுக்கு உத்தியோகத்தில் வியாபாரத்தில் பள்ளி சம்பந்தமான விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

60 வயதுக்கு மேற்பட்ட கும்ப ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போதும், உறவினர்களுடனும், அண்டை வீட்டாருடனும் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அது உங்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவிடும் எனவே பார்த்து செயல்படுவது நல்லது.

அதேபோல நரம்பு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது எனவே இந்த தமிழ் புத்தாண்டு ராசிபலனை பொறுத்தவரை கும்ப ராசிகள் கவனமாக இருப்பது நல்லது. கும்ப ராசிக்காரர்கள் இரண்டு கோயில்களுக்கு செல்ல வேண்டும் ஏனென்றால் ஜென்ம சனி இருப்பதால் நீங்கள் இரண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும். அதாவது திருநள்ளாறு கோவிலுக்கும், திருநாகேஸ்வரம் கோவிலுக்கும் செல்ல வேண்டும் இங்கு சென்று வழிபட்டால் உங்களுக்கு சாதகமான அமைப்பையும் சந்தோஷமான அமைப்பையும் ஏற்படுத்தித் தரும்.

நன்றி :ஜோதிடர் ஷெல்வீ

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel