தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Panam Tharum Graham: உங்க ஜாதகத்தில் பணம் தரும் கிரகம் எதுன்னு தெரிஞ்சிகோங்க!

Panam Tharum Graham: உங்க ஜாதகத்தில் பணம் தரும் கிரகம் எதுன்னு தெரிஞ்சிகோங்க!

Manigandan K T HT Tamil
Oct 03, 2023 11:38 AM IST

இந்த அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும்போது சில அதிர்ஷ்டங்கள் மூலமாக உங்களுக்கு செல்வத்தை வழங்க உதவுகிறார்கள்.

பணத்தை பெருக்கும் கிரகம்
பணத்தை பெருக்கும் கிரகம் (Freepik)

பணம் இருந்தாதான் மதிப்பார்கள் என்பது எல்லோரும் கூறும் வார்த்தை.

பண பல ஸ்தானம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கிறது. பணம் பெருகுவதற்கான விதிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

பொருளாதார கஷ்டம் என்பது தீராத பிரச்சனையாக இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து இரண்டாம் இடம் தான் பணத்தை கொடுக்கும் இடம்.

பணத்தை சேமிக்கனும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2ம் இடம் தான் பணத்தை கொடுக்கிறது என பார்த்தோம்.

உங்கள் ஜாதகத்தில் 5, 11, 9 இந்த அதிபதிகள் இந்த 2ம் இடத்திற்கு நல்ல தொர்பில் இருந்தார்கள் என்றால் உங்களிடம் பணம் இருக்கும். பேங்க் பேலன்ஸ் இருக்கும். அந்தப் பணத்தையும் நீங்கள் பெருக்க முடியும்.

இந்த அதிபதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கும்போது சில அதிர்ஷ்டங்கள் மூலமாக உங்களுக்கு செல்வத்தை வழங்க உதவுகிறார்கள்.

திடீரென சொத்துக்கள் வந்தது. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்றெல்லாம் பார்த்து இருப்பீர்கள். அது இப்படிதான் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு லக்கினக்காரர்களும் இந்த அதிர்ஷடத்தை பெற என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

மேஷம்

மேஷ லக்கினக்காரர்களுக்கும் இரண்டாம் அதிபர் சுக்ரன். கால புருஷ தத்துவத்துக்கு இரண்டாம் அதிபதி சுக்ரன்.

ஐந்தாம் அதிபதி சூரியன், 9வது அதிபதி குருவாக வருகிறார். 11 வது அதிபதி சனியாக வருகிறார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாமரைப் பூவை பூஜை அறையில் மகாலட்சுமி சாத்தி பிரார்த்தனைகளை முன்வையுங்கள். இரண்டு நெய் தீபங்கள் ஏற்றுங்கள்.

மானசீகமாக பிரார்த்தனை செய்யுங்கள். கற்கண்டுகளை பரப்பி அதன் மீது நெய் தீபங்களை ஏற்றுங்கள்.

திருவிசநல்லூர் யோக நந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்