Macham Palan : இந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.. உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா?
Mole Astrology : நம் உடலில் இருக்கக்கூடிய மச்சங்களும் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். குறிப்பாக இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

ஆண், பெண் என இரு பாலர்களின் உடலிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களுக்கு ஜோதிடத்தில் தனிச் சிறப்பு மிக்க அர்த்தங்கள் உள்ளன. மச்சங்கள் நமது தலைவிதியை குறிப்பது மட்டுமின்றி, ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன.
நமது உடலில் இருக்கும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு தான் கணிக்கப்பட்டிருக்கிறது மச்ச சாஸ்திரம். நம்முடைய உடலில் இருக்கும் ஒரு சிறு புள்ளிகளைத்தான் மச்சம் என்கிறோம். இது கருப்பு, மஞ்சள், நீலம், சிவப்பு, சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் இருக்கின்றன. சிலருக்கு கடுகு போல சிறிதாகவும், சிலருக்கு அதைவிட பெரிதாகவும் காணப்படலாம்.
நமது உடல் பாகங்களில் உள்ள மச்சங்கள் சுப பலன்களை தரும் வல்லமை கொண்டதாக உள்ளது. நம் உடலில் இருக்கக்கூடிய மச்சங்களும் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம். குறிப்பாக இந்த ஐந்து இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
அது எந்தெந்த இடங்கள் ஆண்களுக்கு எப்படி இருக்கிறது? பெண்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை குறித்து இதில் பார்க்கலாம்.
ஆண்களுக்கு வலது பக்கம் மச்சம் இருந்தால் அது நல்ல பலன்களை தேடி தருவதற்கான அறிகுறி என்று அர்த்தமாம். அதேபோல பெண்களுக்கு வலது புறத்தை காட்டிலும் இடது புறத்தில் அதிக மச்சம் இருப்பின் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயமாக சாதிப்பார்கள் பணம் சம்பாதிப்பார்கள் என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.
உதட்டின் மேல்
முதலாவதாக ஆண்களுக்கு உதட்டின் மேல் வலது புறத்திலும் பெண்களுக்கு உதட்டின் மேல் இடது புறத்திலும் மச்சம் இருந்தால் அவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள், நல்ல பலன்கள் அவர்களை தேடி வரும், அதிர்ஷ்டம் ஏற்படும்,கோடீஸ்வரர் ஆவது உறுதி. ஜன வசியம் என சொல்லப்படக்கூடிய ஜனங்களை வசியப்படுத்தும் அமைப்பு இவர்களுக்கு அதிகம் உண்டு.
கன்னம்
அடுத்து ஆண்களுக்கு வலது கன்னத்தில் குறிப்பாக கண்களுக்கு கீழே உள்ள இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பார்க்கும் இடமெல்லாம் சொத்து வாங்கி குவிப்பார்கள். அதேபோல பெண்களுக்கு இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் சொத்துக்கள் குவிக்க போகிறார்கள் என்று அர்த்தமாம்.
புருவம்
ஆண்களுக்கு வலது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க போகிறார்கள் என்று அர்த்தமாம். அது அரசியலாக இருந்தாலும் சரி அல்லது பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆன்மீகமாக இருந்தாலும் சரி, குடும்பத்திலும் சரி இவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று நடக்கக்கூடிய நபராக இருப்பார். அதேபோல பெண்களுக்கு இடது புருவத்தின் மேல் மச்சம் இருந்தால் அவர்களும் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய வல்லமை பெற்றவராக இருப்பார் என்று அர்த்தமாம்.
ஆள்காட்டி விரல்
ஆண்களுக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் தொட்டது துலங்கும். செல்வ செழிப்போடு இருப்பார்கள். வைரம் வைருடியம் வாங்கும் யோகம் ஏற்படும். தங்கத்தை சேர்த்து வைக்கக்கூடிய குபேரனாக நீங்கள் திகழ்வீர்கள். அதேபோல பெண்களுக்கு இடது கையில் ஆள்காட்டி விரல் கீழ் மச்சம் இருந்தால் செல்வ செழிப்போடு திகழ்வீர்கள். லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்ததாக இருக்கும் நீங்கள் தீர்க்க கரசியாக திகழ்வீர்கள்.
தொப்புள்
அதேபோல பெண்களுக்கு தொப்புளில் இடது புறத்தில் மச்சம் இருந்தால் வம்சம் விருத்தியாகும். அந்தக் குழந்தையின் மூலம் பணம் பெருகும் சொத்துக்கள் குவியும். தாய் மூலமாகவும் ஏற்படும். அதேபோல வலது புறத்தில் தொப்புளில் மச்சம் இருந்தால் ஆண்களுக்கு வாழையடி வாழையாக சொத்து சேர்க்கும் யோகம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்