தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  The Conjunction Of Rahu And Sun Ends: ராகு - சூரியனின் இணைவு முடிவு: தலை எழுத்து மாறிப்போய் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

The conjunction Of Rahu and Sun Ends: ராகு - சூரியனின் இணைவு முடிவு: தலை எழுத்து மாறிப்போய் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Apr 21, 2024 09:32 PM IST Marimuthu M
Apr 21, 2024 09:32 PM , IST

  • The conjunction of Rahu and Sun ends:ராகு மற்றும் சூரிய சேர்க்கை முடிந்துவிட்டதால், சில ராசியினர் வெற்றியையும் பணத்தையும் பெறுகின்றனர்.

Terminating Rahu – Sun combination: ஜோதிடம் என்பது நம் வாழ்வில் பின்னால் நடக்கும் நன்மை, தீமைகளைக் கணக்கிட உதவும் பண்டைய கால முறையாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகங்கள், ஒவ்வொரு ராசியில் பெயரும்போதும், சில ராசியினர் நன்மையையும்; சில ராசியினர் தீமையையும் பெறுகின்றன.கிரகங்களில் நிழல் கிரகமாக இருக்கும் ராகு பகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். அதேபோல், கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரிய பகவான், கடந்த மாதம் மார்ச் 14ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரித்தார். 

(1 / 6)

ஆகையால், மீன ராசியில் ராகு மற்றும் சூரியனின் இணைவு நிகழ்வு நடந்தது. இந்த இணைவு சில ராசியினருக்கு துர்பாக்கியத்தை அசுப பலனை உண்டாக்கியது. பின், கடந்த ஏப்ரல் 13ம் தேதி, ராகு - சூரியனின் இணைவு முடிந்தது. ராகு - சூரியன் இணைவுக்காலம் முடிந்ததால், சில ராசியினருக்கு நிதி நன்மைகள் கிடைக்கப்போகிறது. அத்தகைய ராசிகள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

(2 / 6)

மீனம்: ராகு மற்றும் சூரியனின் இணைவு காலம் முடிவடைந்ததால், மீன ராசியினருக்கு மனதில் இருந்த குழப்பம் அகலும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தைரியம் கூடும். தொழில் செய்பவர்கள் மாற்றி யோசித்தால் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கலாம். தொழிலில் இருந்து வந்த சுணக்கம் மறையும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் மூலம் முன்னேற்றப் பாதையைப் பெறுவீர்கள். 

(3 / 6)

கடகம்: ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை முடிந்துபோனதால், கடக ராசியினருக்கு கெடு பார்வை மீறி, நல்ல பார்வை இருக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். கடந்த காலங்களைவிட நிகழ்காலத்தில் வருவாய் கூடும். தனியார் துறையில் பணி செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். பணியில் மறைக்கடிக்கப்பட்ட உங்களது திறமை இந்த காலத்தில் வெளிப்படும். அயல்நாடு செல்ல முயற்சித்தால் இந்த காலத்தில் கடக ராசியினருக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும்.ராகுவின் இருப்பினால் மந்தமாக இருந்து வந்த கடக ராசியினர், இனிமேல் சுறுசுறுப்பு ஆவார்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். அரசுத்தேர்வுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு நல்ல முறையில் வரும்.

(4 / 6)

மிதுனம்: இந்த ராசியினருக்கு ராகு மற்றும் சூரிய சேர்க்கையின் முடிவு, மிதுன ராசியினருக்கு கெடுதல் விலகும். தொழில் முனைவோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இக்காலத்தில் போட்டி வியாபாரிகளின் தொல்லை தீரும். பணி கிடைக்காமல் அவதிப்படும் மிதுன ராசியினருக்கு, இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வரும் மிதுன ராசியினருக்கு இக்காலத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களின் உழைப்பு நிறுவனத்தினரால் அங்கீகரிக்கப்படும்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்