Janma Sani: கம்பியை பழுக்க காய்ச்சி சூடு வைக்கும் சனி.. ஜென்ம சனியால் வடு வாங்கும் கும்பம்! - தப்பிக்க செய்ய வேண்டியவை!
சில கும்ப ராசிக்காரர்கள், அருகில் உள்ள கோயில்களுக்கு செல்கிறேன், அனாதை மக்களுக்கு உதவுகிறேன், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகிறேன் என பல பரிகாரங்களை செய்த போதும், கஷ்டம் குறைந்த பாடில்லை என்று புலம்புகிறார்கள்.
ஜென்ம சனியால் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் கும்பராசிக்காரர்கள், அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து, பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம், அண்மையில் வராஹி ஜோதிடம் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ கும்ப ராசிக்காரர்கள் ஜென்ம சனியால் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அலைச்சல், மன நிம்மதியின்மை, உறவுகளுக்குள் பகை புதிது புதிதாக வியாதிகள், குலதெய்வ கோயிலுக்கு செல்லும் பொழுது கூட சண்டை, குலதெய்வ கோயிலுக்கு சரியாக செல்ல முடியாமை, கணவன் மனைவிக்குள் பிரச்சினை, குழந்தை உருவாவதில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் கடுமையான அவதிக்கு உள்ளாகி கொண்டிருக்கிறீர்கள்.
சில கும்ப ராசிக்காரர்கள், அருகில் உள்ள கோயில்களுக்கு செல்கிறேன், அனாதை மக்களுக்கு உதவுகிறேன், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகிறேன் என பல பரிகாரங்களை செய்த போதும், கஷ்டம் குறைந்த பாடில்லை என்று புலம்புகிறார்கள்.
பரிகாரம் என்ன?
கும்ப ராசிக்காரர்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள். யாரும் உதவி கேட்டால், உடனடியாக முன் நின்று செய்து கொடுப்பார்கள். ஆனால் அவர்களின் ஒரே பலவீனம் அவர்கள், அவர்களை ஒழுங்காக பார்த்துக் கொள்ள மாட்டார்கள். இதற்கு தீர்வு இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்கிறது. இதிலிருந்து விமோசனம் அடைய கீழ் சொல்லும் கோயில்களுக்கு சென்று வழிபடுங்கள்.
முதலாவதாக, கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லுங்கள். அங்கு செல்லும் நீங்கள், 11 விளக்குகளை ஏற்றி மனமுருக வழிபடுங்கள். சாமிக்கு வஸ்திரம் சாத்துங்கள். மேலும், கர்ப்ப கிரகத்தில் எரியக்கூடிய விளக்கிற்கு சுத்தமான பசு நெய்யை வாங்கி கொடுங்கள். அந்த நெய்யை அங்கிருக்கும் குருக்களிடம் கொடுத்து, உங்கள் கண் முன்னே ஊற்றச் சொல்லுங்கள்.
பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். அதன் பின்னர், வீரபத்திரர் கோயிலுக்கு சென்று வழி படுங்கள்.
இதை ஒரு சனிக்கிழமை அன்று திட்டமிட்டு, அன்றைய நாளிலேயே இந்த மூன்று கோயில்களுக்கும் சென்று வாருங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு நூறு சதவீதம் பெரிய விமோசனம் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை, அவர்களுக்கு இயற்கையாகவே குலதெய்வ அருள் மிக அதிகமாக இருக்கும். அதனால் குலதெய்வத்தையும் நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள். சித்தர் வழிபாட்டையும் நீங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்