தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lagna Palangal: ’மேஷம் முதல் கடகம் வரை!’ ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்! உங்க வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Lagna Palangal: ’மேஷம் முதல் கடகம் வரை!’ ஒரே ராசி ஒரே லக்னத்தில் பிறந்தவரா நீங்கள்! உங்க வாழ்கை இப்படித்தான் இருக்கும்!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 10:25 AM IST

”லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும்”

ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!
ஒரே ராசி - ஒரே லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

சந்திரன் எந்த ராசியில் இருக்கும் போது நாம் பிறக்கிறோமோ அதுதான் ராசி, அவர் எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அதுதான் நமது ஜென்ம நட்சத்திரம். 

சூரியனின் ஒளி ஒரு நாளில் 12 லக்னங்களின் மீதும் குவிக்கப்படும். 2 மணி நேரத்திற்கு ஒரு லக்னம் என்பது இதில் தோராய கணக்காகும்.  

லக்னமும், ராசியும் ஒரே கிரகத்தின் ஆதிபத்தியத்தில் வருவது என்பது அதிசயமான அமைப்பு ஆகும். 

ராசியும், லக்னமும் ஒன்றானால் அந்த கிரகத்தின் வலிமை அதிகப்படியாக உங்களுக்கு கிடைக்கும். தெளிவான சிந்தனைகள், செயல் திறன், தீர்க்கமாக முடிவெடுத்தல் ஆகிய குணாதிசயங்கள் இருக்கும். 

மேஷம் ராசி - மேஷம் லக்னம்

செவ்வாய்யின் ஆண் வீடு, சூரியன் உச்சம் ஆகும் இடம், சனி நீசம் ஆகும் இடம். தான் எனும் எண்ணம் மிகுதியாக இருக்கும். செவ்வாய்யின் மூர்க்க குணம் அதிகப்படியாக வெளிப்படும். பிடிவாதம், துணிச்சல் அதிகம் இருக்கும். வெற்றிக்காக கடினமாக போராடுவார்கள், யாரயும் துணிச்சல் உடன் எதிர்ப்பார்கள், பூமியால் பெரும் லாபம் பெறுவார்கள். செவ்வாய் பகவானின் காரகத்துவம் இவருக்கு பல நன்மைகளை தரும். 

வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டி வரும், அடகாத தன்மை, யாரையும் எதிர்ப்பது, பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். 

ரிஷபம் ராசி - ரிஷபம் லக்னம்

சுக்கிரனின் ராசியான ரிஷபம் வாழ்கை, வசதிகளை அனுபவிப்பத்தில் அதிக முக்கியத்துவம் தருவீர்கள், சொத்து சேர்ப்பதில் அதிக முன்னுரிமை தருவீர்கள், குடும்பத்தின் மேல் பற்று பாசம் அதிகரிக்கும். சமூதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். 

சந்திரன் இதில் உச்சம் ஆகிறார் என்பதால் வளர்பிறை சந்திரன் ஆக இருந்தால் நல்ல நன்மை கிடக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தல் கஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும். 

மிதுனம் ராசி - மிதுனம் லக்னம்

மிதுன லக்னம், மிதுன ராசியை பொறுத்தவரை புதனே லக்னாதிபதியாகவும், ராசி அதிபதியாகவும் வந்துவிடுகிறார். அதி புத்திசாலித்தனமான கிரகமான கிரகம் சந்தோஷமாக இருக்க வேண்டும்  என்பதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி கொள்ளும். செலவீனங்களை பற்றி தெரியாமல் இருத்தல், கடன் பட்டு வாழ்வில் சோதனைகளை சந்திப்பது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கலாம். 

கடக ராசி-கடக லக்னம்

கடக லக்னம் கடக ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆவார். சந்திரன் அதிக வலிமை உடன் இருப்பதால் தாய் அன்பு மிகுந்து கிடைக்கும். நிதானம், சமயோஜித புத்தி, லாபத்தை பார்க்கும் தன்மை உள்ளிட்ட குணங்கள் இவர்களுக்கு கிடைக்கும். சொத்து சேர்ப்பீர்கள், ஒரு கூட்டத்திற்கு தலைமை ஏற்கும் பொறுப்பு வரும், ஆட்சி அதிகாரம் கைக்கு வரும், சேவை மனப்பான்மையால் நன்மை கிடக்கும்.

சில நேரத்தில் மிகுந்த சுயநலமாக நடந்து கொள்வீர்கள். தேவையற்ற முயற்சிகளால் சங்கடங்கள் ஏற்படும். உழைக்காமல் பணம் வருமா என்று தேடுவீர்கள்.  இந்த அமைப்புகளை தவிர்க்க வேண்டியது அவசியம். 

WhatsApp channel

டாபிக்ஸ்