தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Wrestlers Protest: 45 நாள்களுக்குள் தீர்வு காணாவிட்டால்..! உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை

Wrestlers Protest: 45 நாள்களுக்குள் தீர்வு காணாவிட்டால்..! உலக மல்யுத்த அமைப்பு எச்சரிக்கை

Jun 01, 2023, 03:52 PM IST

  • World Wrestling body gives 45-day ultimatum to Indian federation போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார் ஒலிம்பிக் பட்டம் வென்ற குத்துசண்டை வீரரான விஜேந்தர் சிங். அரசு வழங்கிய பரிசுதொகையை திருப்பி கேட்பவர்கள், அவர்களை போல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கம் வென்று காட்டிய பிறகு பாடம் எடுக்கட்டும் என்று காட்டமாக கூறினார். பிரபல விளையாட்டு வீரர்களான நீரஜ் சோப்ரா, அபிநவ் பிந்த்ரா, சுனில் சேத்ரி, இர்பான் பதான் உள்பட பலரை தொடர்ந்து விஜேந்தர் சிங் தனது ஆதரவு குரலை கொடுத்துள்ளார். அத்துடன் போலீஸ் நடவடிக்கையும் விமர்சித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து உலக மல்யுத்த அமைப்பு 45 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மல்யுத்த வீரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு. இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளது. எனவே 45 நாள்களுக்குள் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என்றால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்படும் எனவும், அந்த மல்யுத்த வீரர்கள் பொதுவான கொடியுடன் விளையாடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தன்னை மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் கூறியுள்ளார்.