Viral video: நாயால் எழுந்த பிரச்னை! முதியவரை துரத்தி துரித்தி அடித்த பெண் - வழக்குப் பதிவு செய்த போலீஸ்
Aug 04, 2023, 02:29 PM IST
- உத்தரபிரதேசம் மாநிலம் காசியபாத்தில் 75 வயது முதியவரை 22 வயது இளம்பெண் கையில் குச்சியை வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணுக்கு எதிராக வலுவான கண்டனங்கள் இணையவாசிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட முதியவர் அளித்த புகாரின் பேரில் இளம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போர்மெண்டில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற நாய் அவருக்கு சொந்தமானதா என அவரிடம் முதியவர் கேட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண் அங்கிருந்த வாட்ச்மேனிடம் இருந்த குச்சியை பிடுங்கி, அந்த முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் பலர் நடமாடிக்கொண்டிருக்க, இரவு 10.15 மணியளவில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முதியவர் அளித்த புகாரில் அந்த பெண்ணுக்கு நடத்தை பிரச்னை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அந்த பெண் தனது தாயார் மற்றும் செல்ல பிராணியான நாயுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது இன்னொரு நாய் கயிறு இல்லாமல் அவர்களை பின்தொடர்ந்துள்ளது. அப்போது முதியவர் கயிறு இல்லாமல் இருக்கும் நாயும் அந்த பெண்ணுடையதா என கேட்டபோது பிரச்னை எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இணையவாசிகள் பலரும் இளம்பெண்ணுக்கு எதிராக தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.