‘என்ன செய்ய வேண்டும்?’ஏழு கடல் ஏழு மலை பட பாடல் வெளியீட்டில் இயக்குநர் ராம்!
Feb 15, 2024, 04:21 PM IST
- கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராம், "நீங்கள் எவ்வளவு அன்பாளர்கள் மற்றும் உங்களிடம் எவ்வளவு காதல் உள்ளது என்பது புரியும் என தெரிவித்த அவர் அது உங்களை வேறொரு மனிதனாக மாற்றும் என்றார். உற்சாகம் பெற்றவனாக, மேலும் இசை, கவிதை, நடனம் ஆகியவற்றை ரசிக்க தூண்டும் எனவும் கூறினார். அந்த புத்தகத்தின் பாதிப்பு, இந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே “ஏழு கடல் ஏழு மலை” திரைப்படம் எனவும் தெரிவித்தார். எனது முந்தைய நான்கு படங்கள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், ஐந்தாவது படமான “ஏழு கடல் ஏழு மலை” நிச்சயமாக பிடிக்கும். இந்த படம் முழுக்க முழுக்க பேசுவது "மானுடத்தின் காதலை பற்றியும், இந்த உலகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது" என தெரிவித்தார்.