தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Indian Army: தூப்பாக்கியால் சுற்றி வளைத்த தாக்குதல் காரர்களிடம் போலீஸாரை மீட்ட ராணுவத்தினர் - வைரல் விடியோ

Indian Army: தூப்பாக்கியால் சுற்றி வளைத்த தாக்குதல் காரர்களிடம் போலீஸாரை மீட்ட ராணுவத்தினர் - வைரல் விடியோ

Nov 08, 2023, 08:43 PM IST

  • கடந்த மாதம் 31ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் வைத்து இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட மீட்பு பணி தொடர்பான விடியோ வைரலாகியுள்ளது. இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள இம்பால் மாநிலத்தின் மோரே நகரத்துக்கும் இடையே நெடுஞ்சாலையில் தாக்குதலுக்கு பயந்து பதுங்கியிருந்த மணிப்பூர் காவல்துறை கமாண்டோக்களை, அசாம் ரைபிள்ஸ் பிரிவினரிடமிருந்து இந்திய ராணுவம் காப்பாற்றும் காட்சியை காணலாம். இந்த விடியோவில் மலைப்பகுதிகளில் மறைந்தவாறு துப்பாகி ஏந்தி தாக்குதல் நடத்த தயாராக இருந்த தாக்குதல்காரர்களிடமிருந்து போலீசாரை மீட்கும் காட்சிகள் உள்ளன. கவலை வேண்டாம். நாங்கள் உங்களை காப்பாற்ற இருக்கிறாம் என ராணுவத்தின் விடியோவில் சொல்லும் காட்சியும் இடம்பிடித்துள்ளன. முன்னதாக மலைப்பகுதியில் பதுங்கியிருந்த துப்பாக்கி ஏந்திய கும்பல், காவலர்கள் வந்த கான்வாயை வழிமறித்தது. இந்த சம்பவத்தில் மூத்த போலீஸ் அதிகாரி சுடப்பட்டத்தை தொடர்ந்து ராணுவத்தினர் சுற்றிவளைக்கப்பட்ட காவலர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாக கூகி பழங்குடியினர் மற்றும் மெய்திஸ் பிரிவுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ராணுவத்தினரின் மீட்பு விடியோ வெளியாகியுள்ளது.