தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kodaikanal: 400 வருட பழமையான மலை கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்கு இயந்திரம்

Kodaikanal: 400 வருட பழமையான மலை கிராமங்களுக்கு குதிரையில் சென்ற வாக்கு இயந்திரம்

Apr 18, 2024, 10:45 PM IST

  • மக்களவைதேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன், குறிப்பாக 400 வருடங்கள் பழமையான வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்துமே குதிரைகள் மூலம் கட்டி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் காட்டு வழியாக கொண்டு சென்றனர். வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லி. மலையூர் மலைகிராமத்துக்கு குதிரை மூலம்வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. குதிரையில் பொருள்களை ஏற்றி, அதிகாரிகள் வாக்குச்சாவடி மையத்துக்கு நடந்தே சென்று சேர்ந்தனர்.