தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'எங்களுக்கு கடவுள் கேப்டன் தான்'.. மாலை அணிந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லும் தொண்டர்கள்!

'எங்களுக்கு கடவுள் கேப்டன் தான்'.. மாலை அணிந்து விஜயகாந்த் நினைவிடத்திற்கு செல்லும் தொண்டர்கள்!

Jan 31, 2024, 07:07 PM IST

  • Vijayakanth: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்துகொண்டனர். மேலும் 10 பேர் மாலை அணிந்து, விரதமிருந்து சென்னையில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சனிக்கிழமை யாத்திரை செல்லவுள்ளனர். இது குறித்து தொண்டர்கள் கூறிய போது, மறைந்த கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து அவருக்காக மாலை அணிந்து 5 நாட்கள் விரதம் இருக்க உள்ளோம். கேப்டனை வழிபாடு செய்ய "தர்ம தேவனே போற்றி! போற்றி!" என்ற தாரக மந்திரத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் 10 பேர் மாலை அணிய உள்ளனர். அதன் பின்னர் வருகின்ற சனிக்கிழமையன்று பூ கலசங்களுடன் அனைவரும் சென்னைக்கு யாத்திரை சென்று, ஞாயிற்றுக்கிழமை அன்று கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளோம். ஆண்டுதோறும் இதே போன்று மாலை அணிந்து விரதம் இருந்து நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்திலேயே முதல் முறையாக அரசியல்வாதி ஒருவருக்கு தொண்டர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, பூ கலசம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.