Vanathi Srinivasan: தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், உள்ளிட்ட அதிமுக திட்டங்களை பாராட்டிய வானதி சீனிவாசன்!
Apr 10, 2024, 02:39 PM IST
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நடக்க இருப்பது மாநிலத்தில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை எனவும், மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் என்றார். மேலும் தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை மோடி செய்துள்ளதாக வானதி சீனிவாசன் அப்போது கூறினார். தமிழ் மொழி என கூறி வருவதாகவும், தமிழ் மொழி பள்ளிகளை மூடி விட்டு ஆங்கில பள்ளிகளை நடத்தி வருவதாகவும், அவர்களின் ஒரு குழந்தையாவது தமிழ் வழி கல்வி பயில்கிறார்களா என கேள்வி எழுப்பினார். ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எந்த வசதியும் இல்லை என்றார். பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வந்த லேப்டாப் நிறுத்தப்பட்டதாகவும், தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டதாகவும், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சைக்கிள் முறையாக கொடுப்பதில்லை என்றார். எதுவெல்லாம் நல்ல திட்டங்களோ அதனை எல்லாம் நிறுத்தி விட்டார்கள் என குற்றம் சாட்டினார். பேருந்தில் இலவச பயணம் என கூறும் நிலையில் பேருந்துகளே வருவதில்லை எனவும் பிறகு எப்படி பயணிப்பது என்றார். அனைத்து பெண்களுக்கும் என கூறிவிட்டு தற்போது மகளிர் உரிமை திட்டம் அனைவருக்கும் வரவில்லை என்றார்.