Aircraft Crash: அமெரிக்காவில் விமான படைதளத்தில் விழுந்து நொறுங்கிய பி1 பாம்பர் விமானம் - விசாரணைக்கு உத்தரவு
Jan 05, 2024, 11:00 PM IST
- அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் இருக்கும் எல்ஸ்வொர்த் என்ற விமான படை தளத்தில் வெளியே பி1 பாம்பர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. விமானம் நொறுங்குவதற்கு முன்னர் அதில் பயணித்த நான்கு பேர் பாதுகாப்பாக வெளியேறினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. லேண்டிங் முயற்சியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விமான தளத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி1 பாம்பவர் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் அதில் விமான படையை சேர்ந்தவர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பி1 பாம்பர் விமானம் சூப்பர்சோனிக் விமானம் 1980 முதல் சேவையில் இருந்து வருகிறது. ஆசிய பசிபிக் பகுதிகளில் வெடிகுண்டு தொடர்பான சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட விமானங்கள் கட்டமைக்கப்பட்ட நிலையில், தற்போது 60 வரை சேவையில் இருந்து வருகிறது.