தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Trichy: Jee தேர்வில் வெற்றி - Trichy Nit-யில் படிக்கும் வாய்ப்புபெற்ற பழங்குடியின மாணவி!

Trichy: JEE தேர்வில் வெற்றி - Trichy NIT-யில் படிக்கும் வாய்ப்புபெற்ற பழங்குடியின மாணவி!

Jul 10, 2024, 09:45 PM IST

  • திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சை மலையைச் சேர்ந்த மலைவாழ் இன மாணவி ரோஹிணி, என்.ஐ.டி யில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி ரோஹிணி கூறும்போது, ‘ மலைவாழ் மக்களுக்கான பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து ஜே.இ.இ தேர்வு எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று, திருச்சி என்.ஐ.டியில் சேர்க்கை பெற்றுள்ளேன். பி.இ.,கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவை தேர்வு செய்து உள்ளேன்.என் படிப்புக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பள்ளியில் படித்தபோது என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் என்.ஐ.டியில் சேர்க்கை பெற வேண்டும் என்று கேட்டேன். பள்ளியில் பிளஸ் டூ தேர்விலும் ஜேஇஇ தேர்விலும் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி உதவி செய்தனர். என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மேல்படிப்புக்கு உதவி செய்யும் முதல்வர் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.