தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ma Subramanian: தாமதமாக வந்தால் அனுமதியே கிடையாது! அப்புறம் எப்படி கருணை மதிப்பெண் தந்தார்கள் - மா. சுப்பிரமணியன்

Ma Subramanian: தாமதமாக வந்தால் அனுமதியே கிடையாது! அப்புறம் எப்படி கருணை மதிப்பெண் தந்தார்கள் - மா. சுப்பிரமணியன்

Jun 13, 2024, 07:56 PM IST

  • சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். அப்போது அவர் கூறியதாவது, "நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி. நீட் தேர்வு குளறுபடியால் நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்பில் சேர நீட் எழுதியவர்களில் 31% பேர்தான் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். 2024ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கேள்வி எழுப்பினால், கருணை மதிப்பெண் வழங்கப்படுள்ளது எனக் கூறுகின்றனர். தாமதமாக வருவோரை அனுமதிக்காத நிலையில், பிறகு எப்படி நேர பற்றாக்குறை ஏற்பட்டது நீட் தேர்வில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை. ஹரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 6 பேர் முதலிடம் பிடித்தனர். நீட் தேர்வில் நடந்த குளறுபடியால் நாடு முழுவதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.