Titan Submarine Missing : காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள் உயிரிழப்பு - வெளியான தகவல்
Jun 23, 2023, 05:00 PM IST
- கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை காண்பதற்காக 5 பேருடன் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் காணாமல் போன நிலையில், அதில் பயணித்த அனைவரும் இறந்திருப்பதாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது. நீர்மூழ்கி கப்பலின் சிதறல்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் வெடிப்பு ஏற்பட்டு அதில் இருந்தவர்கள் அனைவரும் இறந்திருக்ககூடும் என கூறப்படுகிறது. கடந்த நான்கு நாள்களுக்கு மேலாக நீர்மூழ்கி கப்பலை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் ரேடார் சிக்னல் கிடைக்காமல் இருந்துள்ளது. கடந்த 18ஆம் தேதி இந்த நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் இழந்த நிலையில், காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. கனடாவை சேர்ந்த கப்பலில் இருந்து ரோபோ ஒன்றின் உதவியுடன் இந்த கப்பலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அடலாண்டிக் கடற்பரப்பில் இந்த நீர்முழ்கி கப்பல் 1,600 அடி (சுமார் 488 மீ) ஆழத்தில் காணாமல் போயிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலின் மீட்பு முயற்சியில் பல்வேறு நாடுகளும் கடந்த சில நாள்களாக ஈடுபட்டது. இந்த கப்பலில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அவரது மகனும் பயணித்துள்ளனர்.