தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  The Kerala Story Row: தி கேரளா ஸ்டோரி சர்ச்சை! ‘மூன்று பெண்களுக்கு நடந்த அநீதி’ - யூ டர்ன் அடித்த படக்குழு

The Kerala Story Row: தி கேரளா ஸ்டோரி சர்ச்சை! ‘மூன்று பெண்களுக்கு நடந்த அநீதி’ - யூ டர்ன் அடித்த படக்குழு

May 02, 2023, 10:17 PM IST

  • விரைவில் வெளியாக இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உலா வந்து கொண்டிருக்கும் இந்த நேபத்தில், தற்போது யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்ட படத்தின் டீஸரில் இடம்பெற்றிருக்கும் descriptionஐ மாற்றியுள்ளனர். பட டீஸர் வெளியீட்டின்போது கேரளாவில் சுமார 32 ஆயிரம் இளம்பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைத்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று இளம் பெண்களின் உண்மை கதை என மாற்றப்பட்டிருக்கிறது. படத்தின் டீஸர் வெளியான பின்பு முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தையும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதாகவும், கேரள மாநில மக்கள் மீது தவறான பார்வையை முன்னிருத்தும் விதமாகவும் அமைந்திருப்பதாக கூற பல்வேறு தரப்பினரும் படத்துக்கு எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர். இதுவொரு சங்க் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரம் என படம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்திருந்தார். இந்த படத்தில் கூறப்படும் விஷயம் உண்மை என நிருபிப்பவர்களுக்கு ரூ. 1 கோடி சன்மானம் அளிக்கப்படும் கேரள இளைஞர்ஸ் முஸ்லீம் லீக்கை சேர்ந்த நபரும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையே இந்த படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.