தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  "ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள்" - முதல்வர் ஸ்டாலின்

"ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள்" - முதல்வர் ஸ்டாலின்

Dec 02, 2024, 07:53 PM IST

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு முதலமைசசர் மு.க.ஸ்டாலின் கூறுகையில். விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை கண்டிராத மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது.புயல், மழை பாதிப்புகளை கணக்கிட்டு ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி கோருவது எங்கள் கடமை. நிச்சயமாக அனுப்புவோம். நிதி தருவது அவர்களின் கடமை. ஆனால், ஒவ்வொரு முறையும் அதை செய்ய மறுக்கிறார்கள்" என்றார்.