தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jayam Ravi: 'வாழ்க்கையில் தோற்றால் தப்பு'

Jayam Ravi: 'வாழ்க்கையில் தோற்றால் தப்பு'

Feb 15, 2024, 04:16 PM IST

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஜெயம்ரவி கலந்து கொண்டார். அவரது வருகையின் போது அரங்கத்தில் இருந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆரவாரத்துடன் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய நடிகர் ஜெயம்ரவி, இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அவர் என்னுடைய காதலர் தினத்தை விட்டு விட்டு இங்கு வந்துள்ளேன் என கூறினார். மேலும் எனக்கு நீங்கள் அனைவரும் ஒரு உறவாக இருக்கிறீர்கள் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வருங்காலம் பின்னால் ஓடாதீர்கள் இப்போது இருக்கின்ற மாதிரி மகிழ்ச்சியாக இருந்தாலே வருங்காலம் உங்களை தேடி வரும் என தெரிவித்த அவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் தப்பில்லை, ஆனால் வாழ்க்கையில் தேர்ச்சி பெறாமல் போனால் தான் தப்பு என அறிவுரை வழங்கினார்.