தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  India Russia Trade: ரஷ்யாவில் இருந்து 10 நாள்களில் இந்தியாவுக்கு சரக்குகள் வரவழைக்க இணைப்பு ரயில் வழி பாதை

India Russia Trade: ரஷ்யாவில் இருந்து 10 நாள்களில் இந்தியாவுக்கு சரக்குகள் வரவழைக்க இணைப்பு ரயில் வழி பாதை

May 18, 2023, 10:36 PM IST

  • ரஷ்யா-ஈரான் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் வளர்ந்து வரும் சர்வதேச சரக்கு போக்குவரத்தின் ஒரு பகுதியாக ரயில் பாதை ஒன்றை அமைபதற்கான நிதியளிக்கவும், அதை நிர்மாணிக்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்ககூடும் என்று நம்பப்படுகிறது. இந்த ரயில் பாதையானது இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளையும் இணைக்கும். எனவே இது இந்தியா - ரஷ்யா இடையிலான வணிக உறவுகளுக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கும். இந்த ரயில் பாதை அமையும்பட்சத்தில் மாஸ்கோவில் இருந்து இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை இணைக்கப்படும். இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்படும் சரகுகள் 10 நாள்களில் இந்தியா வந்தடையும். வடகிழக்கு ரஷ்யாவில் இருந்து அசர்பைஜான் வழியாக ஈரானின் தென் கடலோர பகுதிக்கு செல்லும் இந்த ரயில் பாதை, பின் அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு இணைக்கப்படும் என கூறப்படுகிறது.இண