தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Palani Temple: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

Palani Temple: பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம் - காரணம் என்ன?

Feb 20, 2024, 04:45 PM IST

  • திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மட்டும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ரோப் காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள், கம்பி வடம், உருளைகள் உள்ளிட்ட பணிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மீண்டும் நாளை மறுநாள் வழக்கம்போல் ரோப் கார் சேவை இயங்கப்படும் எனவும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.