கொடைக்கானல் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறைகள்!
Oct 24, 2024, 07:16 PM IST
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் சாலையில் 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள், மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையை மூடின. இதனால் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாறைகளை அகற்ற 4 முதல் 5 நாட்கள் ஆகும் என நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.