தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  New Parliament Building: இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடம்

New Parliament Building: இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டடம்

May 27, 2023, 08:37 PM IST

  • புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா பிரமாணடமாக நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவின் சிறப்புகள் நிறைந்த கட்டடமாக அமைந்துள்ளது. இந்த கட்டடத்தின் ஒவ்வொரு இடங்களிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்குள்ள சிறப்பு மிக்க பொருள்களை கொண்டு வந்து கட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அனைத்து வண்ணங்களும் நிறைந்த கட்டடமாக புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கலை மற்றும் பண்பாட்டுக்கு கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சார்மதுரா பகுதியில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டு கட்டட வெளிப்புற சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் உதய்பூரில் கிடைக்கும் கேசரியா பச்சை நிற கற்களை மக்களவை சேம்பரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை சேம்பரில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற கற்கள் ஆஜ்மிர் லக்கா பகுதியிலும், வெள்ளை மார்பிள் அம்பாஜி பகுதியிலும் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து தேக்கு மர கட்டைகள் எடுக்கப்பட்டு மும்பையில் மேஜைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கலைவேலபாடுகள் செய்யப்பட்ட கற்கள் ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. அசோக சக்கரம் செய்யப்பட்ட பொருள்கள் அவுரங்காபாத் மற்றும் ஜெய்ப்பூர் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.