Rahul Gandhi: டெல்லியில் மக்களவை செயலகத்தில் 19 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்த ராகுல் காந்தி
Apr 23, 2023, 08:00 AM IST
- எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல்காந்த் டெல்லியில் உள்ள அரசாங்க வீட்டை காலி செய்துள்ளார். அந்த வீடுதொடர்பான ஆவணங்கள், சாவி ஆகியவற்றை மக்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மக்களவை செயலகத்தில் உள்ள இந்த வீட்டில் ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். இந்த வீடு இந்திய மக்கள் எனக்கு கொடுத்தனர். இதற்காக நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மைக்கு பேசியதற்கான விலை இங்கிருந்து காலி செய்கிறேன் என்று வீட்டை காலி செய்த பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த வீட்டில் இருந்தபோது அவர் பயன்படுத்திய பொருள்கள் பெரிய வேனில் எடுத்து செல்லப்பட்டது. கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற ராகுல்காந்தி கடந்த மார்ச் 24ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மோடி என்ற பெயரை குறிப்பிட்டு சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடனடியாக ராகுல் ஜாமினும் அளித்து மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்துமாறும், இந்த தீர்ப்பை ரத்து செய்யுமாறும் இரண்டு வெவ்வேறு மனுக்களை ராகுல் காந்தி தாக்கல் செய்தார்.