PM Modi in Tejas: தேஜாஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்! இந்திய விமான படைக்கு பாராட்டு
Nov 25, 2023, 10:56 PM IST
- இலகுரக போர் விமானான தேஜாஸ் விமானத்தில் பறக்கும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பயணம் இந்தியாவின் உள்நாட்டு திறன்கள் மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருக்கிறது எனவும், தேசியத்தின் திறன் குறித்த புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி இந்திய விமாந படை, டிஆர்டிஓ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். தேஜாஸ் விமான பயணத்தின்போது இந்திய விமான படையினர் அணியும் பச்சை நிற ப்ளைட் சூட்களை அணிந்திருந்தார். தேஜாஸ் விமானத்தின் முதல் வேரியண்ட் இந்திய விமான படையுடன் 2016இல் இணைக்கப்பட்டது. புதிதாக 83 தேஜாஸ் விமானங்கள் ரூ. 36, 468 கோடிக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த விமானங்கள் வரும் 2024 பிப்ரவரியில் டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேஜாஸ் விமானத்தின் அப்டேட் வெர்ஷனான எம்கே 2 வேரியண்ட்க்கு ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.