Plane Catches Fire: நடுவானில் திக் திக்! 3 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது தீ விபத்து - நடந்தது என்ன?
Aug 19, 2023, 09:03 PM IST
- அமெரிக்காவின் ஹாஸ்டனில் உள்ள ஹாப்பி விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகி பறந்த சில நிமிடங்களில் செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான எஞ்சின் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்து அதிக சத்ததுடன் புகைமூட்டம் வெளியேறி தீ பற்றி எரியும் காட்சியை அதில் பயணித்த பயணி ஒருவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விமானம் மெக்ஸிகோவில் உள்ள ரிசார்ட் நகரமான கான்கன் நோக்கி சென்றது. விமானத்தில் திடீரென தீ பற்றியதை தொடர்ந்து உடனடியாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நாடுவானில் செல்லும்போது தீ பிடித்த இந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. விமானத்தின் வலது புற எஞ்சினில் தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட விமானம் போயிங் 737-700 ரக விமானமாகவும், 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது திடீரென எஞ்ஜினில் இருந்து ஒரு வித சத்தம் கேட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கி, மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனமான செளத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் இதுவரை எந்தவொரு அபாயகரமான விபத்தை ஏற்படுத்தியது இல்லை.