CRPF Vehicle Attacked: சிஆர்பிஎஃப் வாகனத்தை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதி! கண் இமைக்கும் நேரத்தில் எஸ்கேப் - சிசிடிவி
Sep 20, 2023, 10:58 PM IST
- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் சாலையில் சென்ற சிஆர்பிஎஃப் வாகனத்தை நோக்கி தீவிரவாதி ஒருவர் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இடையே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த காட்சி சிசிடிவியிவ் பதிவாகியுள்ளது. தனது கையில் வைத்திருக்கும் பிஸ்டலை எடுத்து சுட்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தீவிரவாதி சுட்டதை கவனித்த சிஆர்பிஎஃப் அலுவலர்கள் உஷாராகி உடனடியாக துப்பாக்கி நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் விரைவாக அங்கிருந்து ஓடி சென்றார். காஷ்மீரில் 81 தீவிரவாதிகள் இருப்பதாகவும், அதில் 33 உள்ளூர்வாசிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இவர்களில் 51 பேர் இந்த ஆண்டில் இதுவரை கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 10 பேர் உள்ளூர் வாசிகளும், 41 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. அ்தேபோல் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20 பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரவாத தாக்குதலாலும், என்கவுன்டரிலும் உயிரிழந்திருப்பதாக அதிகார்ப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.