தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Parliament Security Breach: ‘பிளான் பி’ திட்டம், செல்போன் அழிப்பு! நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்

Parliament Security Breach: ‘பிளான் பி’ திட்டம், செல்போன் அழிப்பு! நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் வெளியான பகீர் தகவல்

Dec 17, 2023, 11:40 PM IST

  • நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி உள்ளே இருவர் நுழைந்த விவகாரத்தில், எரிக்கப்பட்ட போன்கள் ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் நாடாளுமன்றம் உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்திய நபரின் போன் என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கிய நபரான லலித் ஜா, மொபைல் போன்கள் முக்கிய ஆதாரமாக இருக்ககூடும் என்பதால் அதை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் அவர்களின் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால் பிளான் பி ஒன்றையும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை அத்தமீறிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ராஜஸ்தானில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போன்கள் கைதாகியிருப்பவர்களில் போன்களாக இருக்கூடும் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது லலித் ஜா என தெரியவந்துள்ள நிலையில், ராஜஸ்தானிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அவர் மற்றொரு குற்றவாளியான மகேஷ் குமாவாத் உதவு புரிந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கடைசியாக கைதாகி இருப்பவர் மகேஷ் குமாவாத். வேலைவாய்ப்பு இன்மையை முன்னிலைபடுத்தி அரசின் கவனத்தை பெற இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் பிளான் பி இருந்தபோதிலும், பிளான் ஏ மூலம் நாட்டின் கவனத்தையே தங்கள் வசம் திருப்பியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இவர்களின் பிளான் பி என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.