Parliament Attack Case: நாடாளுமன்றத்தில் அத்து மீறி நுழைந்த விவகாரம்! மேலும் இருவர் கைது
Dec 21, 2023, 09:19 PM IST
- நாடாளுமன்ற கூட்ட தொடர் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பை கடந்த அத்து மீறி நுழைந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவரது பெயர் சாய் கிருஷ்ணா என்பதும், இவர் கர்நாடகா வித்யாகிரியை சேர்ந்தவர் என்பதும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதாகி இருக்கும் மனோரஞ்சனின் அறை தோழர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். அத்துடன் கர்நாடகாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் மகனாகவும் உள்ளார். கைதான மற்றொரு நபர் பெயர் அதுல் குல்ஷேத்ரா என்பதும், அவர் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது வரை இந்த வழக்கில் 6 பேர் போலீஸ் கஸ்டடியில் உள்ளார்கள். கைதாகி இருக்கும் இருவரிடமும் டெல்லி சிறப்பு காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக்கில் டெலிட் செய்யப்பட்ட பகத் சிஹ் பேன் கிளப் பக்கத்தை நீக்கியது இவர்களாக இருக்ககூடும் என்ற சந்தேகம் போலீசார் தரப்பில் உள்ளது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நுழைந்த விவகாரத்தில் இதுவரை சாகர் ஷர்மா, மனோரஞ்சன், நீலம் ஆசாத், அமோல் ஷிண்டே, லலித் ஜா, மகேஷ் குமாவத் என ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.