தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Jaisalmer: பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த இந்துக்களின் வீடுகளை புல்டெளசரில் இடித்து தள்ளிய ஆட்சியர்

Jaisalmer: பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த இந்துக்களின் வீடுகளை புல்டெளசரில் இடித்து தள்ளிய ஆட்சியர்

May 19, 2023, 09:50 PM IST

  • ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான இடத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இந்துக்கள் குடிபெயர்ந்து வசித்து வந்தனர். அவர்களின் வீட்டை இடிக்க கூறி மாவட்ட ஆட்சியர் டினா தாபி என்பவர் உத்தரவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆட்சியரின் உத்தரவையடுத்து, பாகிஸ்தானிய இந்துக்கள் வசித்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புல்டெளசரால் இடிக்கப்பட்டது. இந்த அகதிகள் எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடிவடிக்கையை அடுத்து ஆட்சியர் டினா தாபி மீது பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு நிலம் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் ஆட்சியர் டினா தாபி அளித்துள்ளார். அத்துடன் அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தங்களது வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தெருக்களில் தஞ்சும் புகுந்துள்ளனர். ஜெய்சல்மரில் உள்ள அமர் சாகர் ஏரி பகுதியில் அவர்கள் வீடு கட்டப்பட்டிருப்பதால் அங்கு செல்லும் தண்ணீர் தடுக்கப்படுவதாக அரசு அலுவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஆட்சியர் டினா தாபியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.