Noyyal River: கோவை நொய்யல் ஆற்றில் மலைபோல் பொங்கும் நுரை - மக்கள் அச்சம்!
May 23, 2024, 03:55 PM IST
- கோவையின் பிரதான நீர்வழித்தடமாக விளங்குகிறது நொய்யல் ஆறு. கோவையில் தொடங்கி கரூர் மாவட்டம் வரை இந்த ஆறு செல்கிறது. இதற்கிடையில், கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சுண்ணாம்பு காவாய் பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து வெண்நுரை பொங்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நுர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.