Mumbai Murder: Live-in பார்ட்னரை கொலை செய்து மரம் வெட்டியால் 20 துண்டாக வெட்டிய முதியவர் கைது
Jun 08, 2023, 10:55 PM IST
- மும்பை மிரா சாலையில் உள்ள அப்பார்ட்மெண்டில் தன்னுடன் வசித்து வந்த லிவிங் பார்ட்னரை மரம் வெட்டும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 56 வயதாகும் மனோஜ் சானே என்பவர், தனது லிவிங் பார்ட்னரான 32 வயதாகும் சரஸ்வதி வைத்யா என்பவரை கடந்த சில நாள்களுக்கு முன் கொலை செய்து 20 துண்டுகளாக வெட்டியுள்ளார். அந்த அப்பார்மெண்டில் வசித்தவர்கள் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் அந்த அப்பார்மெண்டிக்கு வந்த போலீசார், மனோஜ் சானே வசித்த வீட்டை திறந்து பார்த்தபோது அவர் தனது பார்ட்னரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பார்ட்னரை கொலை செய்து விட்டு அந்த ஆதாரத்தை அழிக்கும் பொருட்டு அவர் இவ்வாறு செய்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், வெட்டிய உடல் துண்டுகள் சிலவற்றை குக்கரில் வைத்து வேக வைத்துள்ளார். மேலும் சில துண்டுகளை கிச்சனில் உள்ள வாளியில் வைத்துள்ளார். துர்நாற்றம் வெளியே வீசுவதை தவிர்க்க பல ரூம் ஸ்பேரேக்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார். அவர் உடல் வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மரம் வெட்டும் எந்திரமும் மீட்கப்பட்டது. அதேபோல் உடலில் சில பாகங்கள் இன்னும் கிடைக்கவில்லை.