தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஸ்பெயினில் இருந்து எத்தனை கோடி முதலீடு? – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!

ஸ்பெயினில் இருந்து எத்தனை கோடி முதலீடு? – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!

Feb 07, 2024, 04:52 PM IST

  • Minister TRP Raja: ஸ்பெயினில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தொழில்­துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஸ்பெயின் பயணம் மூலம் உயர்தர அளவிலான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது. முதலமைச்சர் பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று பல்லாயிர கணக்கான முதலீடுகளை தமிழகத்து ஈர்த்து கொண்டு வந்துள்ளார். முதலில் ஐக்கிய அரபு நாடுகள், அதன்பிறகு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றார். தற்போது வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்து வந்துள்ளார். 3440 கோடி ரூபாய் முதலீடுகள் ஸ்பெயின் பயணம் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. எடிபான் நிறுவனம் 540 கோடி ரூபாய்க்கும், ரோக்கோ நிறுவனமும் 400 கோடி ரூபாய்க்கும் முதலீடு செய்ய உள்ளனர். இதுமட்டுமன்றி ஹப்க் லாய்டு நிறுவனம் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஹபக் லாய்டு முதலீடுகள் தமிழகம் முழுவதும் வர உள்ளது. எடிபான் நிறுவன் செண்டர் ஆப் எக்சலன்ஸ் ஒன்றை அமைக்க உள்ளது. அதில் சிறப்பு அம்சங்கள் பல உள்ளது. அதனை செயல்படுத்து தொடர்பாக முதல்வர் அறிவிப்பார். படித்த இளைஞர்களுக்கும், நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கான சிறப்பான அறிவிப்பு அதில் உள்ளது. உயர்தர அளவிலான பல்லாயிரகணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகம் முழுவதும் வர வாய்ப்பு உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.