தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: 'கோவைக்கு முதல்வர் தனி கவனம்' - அமைச்சர் முத்துசாமி

Coimbatore: 'கோவைக்கு முதல்வர் தனி கவனம்' - அமைச்சர் முத்துசாமி

Mar 05, 2024, 05:16 PM IST

அமைச்சர் முத்துச்சாமி இன்று 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது கோவை மாநகராட்சிக்கு முதல்வர் தனி கவனம் செலுத்தி பணம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் இதன் ஒரு பகுதியாக இன்றை நாள் மட்டும் சுமார் 100 கோடி மதிப்பில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த பணிகள் முடியும் போது பெருவாரியான பிரச்சனைகள் முடியும் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி 40 கோடி ஒதுக்கீட்டில் ஆங்காங்கே குடிநீர் இணைப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 3 இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இப்பணிகளை விரைவாக முடிப்பதற்காக அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுப்படுவார்கள் எனவும், மாநகராட்சி ஆணையாளர் மேயரும் பணிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் கூறினார். தமிழ்நாடு முழுவதும் இப்பணிகள் நடைபெற்றாலும் கோவை மாவட்டத்தில் மிகுந்த கவனத்துடன் அதிக அக்கறை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.