தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Manipur Violence: மத்திய இணை அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தீ வைத்த வன்முறையாளர்கள்

Manipur Violence: மத்திய இணை அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - தீ வைத்த வன்முறையாளர்கள்

Jun 16, 2023, 11:00 PM IST

  • மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினரும் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ராஜ்குமார் ராஞ்சன் சிங் வீட்டில் வன்முறையாளர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக அங்கு வன்முறை, கலவரம் நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அங்கு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் இம்பாலில் உள்ள அமைச்சர் வீட்டில் பாதுகாப்பு, ஊரடங்கை மீறி கலவரக்காரர்கள் தீ வைத்துள்ளனர். பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது 20க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும், காவலர்களும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அலுவலக பணி காரணமாக கேரளா அமைச்சர் கேரளா சென்றிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கலவரக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் கீழ் பகுதி, முதல் மாடி சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டாவது முறையாக அமைச்சர் வீட்டில் தாக்குதல் நடைபெற்று இருக்கும் நிலையில் தனது மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை கவலை அளிப்பதாகவும், அனைவரும் வன்முறையை விடுத்து அமைதி நிலைக்கு திரும்புமாறும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன்சிங் கோரியுள்ளார்.உள்ளூர் அரசியல்வாதிகளால் இந்த பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.