தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kotagiri: ஹாயாக உலா வரும் சிறுத்தை..பீதியில் உறைந்த மக்கள் - திக் திக் காட்சி!

Kotagiri: ஹாயாக உலா வரும் சிறுத்தை..பீதியில் உறைந்த மக்கள் - திக் திக் காட்சி!

Jun 11, 2024, 02:08 PM IST

  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது சர்வ சாதாரணமாக உள்ளது. குறிப்பாக பெரியார் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை, கரடி எதிரெதிரே நடமாடிய CCTV காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் உலா வரும் காட்சிகளும் சிசிடிவி யில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித் திரியும் வனவிலங்குகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று கிளப் ரோடு பகுதியில் சிறுத்தை உலா வந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த சிறுத்தை வாகன முகப்பு வெளிச்சத்தை கண்டவுடன் மின்னல் வேகத்தில் அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது. இரவு நேரங்களில் உலா வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.