ஹூக்ளி ஆற்றின் கீழே மெட்ரோ பயணம்! இந்தியாவின் மைல்கல் சாதனை விடியோ
Apr 13, 2023, 03:20 PM IST
- கொல்கத்தா மெட்ரோ ரயில் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக ஆற்றின் கீழே சுரங்கம் அமைத்து மெட்ரோ ரயில் பாதை அமைத்துள்ளது. அங்கு ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையிலான மெட்ரோ பாதையை ஹூக்ளி ஆற்றின் கீழ் பரப்பில் அமைத்துள்ளது. இந்த பாதையில் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் அலுவலர்கள், பொறியாளர்கள் மட்டும் இந்த சோதனை ஓட்டத்தில் பயணித்தனர். இந்த மெட்ரோ ரயில் பாதை திறக்கப்பட்டவுடன், நிலபரப்பில் இருந்து33 மீட்டர் ஆழத்தில் செல்லும் மிகவும் ஆழமான மெட்ரோ ரயில் பாதை என்ற பெருமையை பெறும். அத்துடன் ஆற்றின் கீழ் பரப்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பாதை என்ற சாதனையும் பெற்றுள்ளது. 520 மீட்டர் தூரத்துக்கு ஹூக்ளி ஆற்றின் அடிப்பகுதியில் இந்தப் பாதை அமைந்துள்ளது. இந்த தூரத்தை மெட்ரோ ரயில்கள் 45 விநாடிகளில் கடக்கும். தரைமட்டத்தில் இருந்து 33 மீட்டரும், ஆறு மட்டத்தில் இருந்து 13 மீட்டர் ஆழத்திலும் இந்த பாதையானது அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு மெட்ரோ பகுதி மெட்ரோ பாதையில் இந்த சுரங்கப்பாதை உள்ளது. கிழக்கு மேற்கு பகுதியின் மெட்ரோ ரயில் நீளம் 16.6 கிலோ மீட்டராக உள்ளது. இதில் 10.8 கிலோ மீட்டர் சுரங்கபாதையாக உள்ளது.